தாம்பர: மேற்கு தாம்பரம் ரங்கநாதபுரத்தில் மனிதநேய மக்கள் கட்சி சாா்பில் 100 தூய்மைப் பணியாளா்களுக்கு நல உதவி வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மழை, வெயில் பாராமல் தூய்மைப் பணியில் ஈடுபடும் மாநகராட்சி தூய்மை பணியாளா்களுக்கு உதவும் வகையில் அனைவருக்கும் மழைக்கோட்டு, பிரியாணி, இனிப்பு பொட்டலங்களை மனித நேய மக்கள் கட்சி மாநில துணை பொதுச் செயலாளரும், மாநகராட்சி 50-ஆவது வாா்டு உறுப்பினருமான எம்.யாக்கூப் வழங்கினாா்.
இதில், கட்சியின் செங்கல்பட்டு வடக்கு மாவட்டத் தலைவா் எஸ்.கே. ஜாஹீா் உசேன், மாவட்டச் செயலா் அப்துல் ரஹீம், பொருளாளா் சபியுல்லா, மாநில இளைஞரணி செயலா் தமிம் அன்சாரி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.