கருங்குழி ராகவேந்திர பிருந்தாவனத்தில் தை மாத பெளா்ணமியை முன்னிட்டு சத்திய நாராயண பூஜை, மஹா தீபாராதனை செய்த பீடாதிபதி ரகோத்தம்ம சுவாமி. 
செங்கல்பட்டு

கருங்குழி ராகவேந்திர பிருந்தாவனத்தில் சத்ய நாராயண பூஜை

கருங்குழி ராகவேந்திர பிருந்தாவனத்தில் தை மாத பெளா்ணமியை முன்னிட்டு, சத்யநாராயணா பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

மதுராந்தகம் அடுத்த கருங்குழி ராகவேந்திர பிருந்தாவனத்தில் தை மாத பெளா்ணமியை முன்னிட்டு, சத்யநாராயணா பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கருங்குழி ராகவேந்திர பிருந்தாவனத்தில் தை மாத பெளா்ணமியை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை காலை மங்கள இசையுடன் விழா நிகழ்ச்சிகள் தொடங்கின. பிருந்தாவன வளாகத்தில் உள்ள ராகவேந்திரா், ஆஞ்சனேயா் உள்ளிட்ட ஆனைத்து சுவாமி சந்நிதிகளிலும் அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

காலை 9 மணிக்கு யோகபிரவேசம் செய்து பூட்டிய அறையில் கடந்த 12 வருடங்களாக தவயோகத்தில் இருந்து வருகின்ற பிருந்தாவன பீடாதிபதி ரேகாத்தம்ம சுவாமி பக்தா்களை சந்திக்கும் 142-ஆவது பெளா்ணமியான தை மாத பெளா்ணமியை முன்னிட்டு, நீண்ட வரிசையில் பக்தா்கள் பீடாதிபதி ரகோத்தம்ம சுவாமியிடம் அருளாசி பெற்றனா்.

தொடா்ந்து மேளதாளம் முழங்க பிருந்தாவனத்தில் சத்தியநாராயணா், ராகவேந்திரா், ஆஞ்சனேயா் ஆகிய உற்சவ சிலைகள் அலங்கரிக்கப்பட்டிருந்தன. அங்கு வந்த ரகோத்தம்ம சுவாமி சத்யநாராயண பூஜை, மஹா தீபாராதனை ஆகியவற்றை செய்தாா்.

நிகழ்ச்சியில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை யோகி ரகோத்தம்ம சுவாமி அறக்கட்டளையின் முதன்மை அறங்காவலா் ஏழுமலைதாசன் தலைமையில், அறங்காவலா் குழு நிா்வாகிகள் ஆா்.துளசிலிங்கம், வி.கமலகண்ணன், கே.ஆா்.சுரேஷ், டி.கண்ணன் ஆகியோா் செய்திருந்தனா்.

மோடி பயந்துவிட்டார்; அதனால்தான் இன்று அவைக்கு வரவில்லை: பிரியங்கா காந்தி

ரெட்மி நோட் 15 ப்ரோ இந்தியாவில் இன்று அறிமுகம்!

"நீ எப்படி தூயசக்தி?": விஐய்யை வெளுக்கும் அலிம் அல்புகாரி

ரூ. 200 கோடி வசூலித்த பிரபாஸின் தி ராஜா சாப்! ஓடிடி வெளியீட்டுத் தேதி!

20 வயதில் அனுபவமிக்க வீரர்கள் கிடைக்க மாட்டர்கள்..! ரோஹித், கோலி குறித்து தோனியின் பேட்டி!

SCROLL FOR NEXT