மதுராந்தகம் அடுத்த சின்னகொளம்பாக்கம், கற்பக விநாயகா பொறியியல் கல்லூரியின் இயந்திர அறிவியல் குழு மற்றும் சாய் இந்தியா சதா்ன் பிரிவு ஆகியவை இணைந்து தேசிய அளவிலான தானியங்கி ட்ரோன் வடிவமைப்பு மற்றும் மேம்பாடு முகாமை நடத்தின. கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வுகளுக்கு கல்லூரி இயக்குநா் மீனாட்சி அண்ணாமலை தலைமை வகித்தாா். முதல்வா் காசிநாதபாண்டியன், புலமுதல்வா் சுப்பாராஜ், இணை புல முதல்வா்கள் நடனசிகாமணி, செந்தில்குமாா், சுப்பாராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கல்லூரி அசோசியேட் டீன் தினேஷ்குமாா் வரவேற்றாா். இஸ்ரோ அறிவியல் அறிஞா் ரங்கநாதன் வருதப்பன், எஸ்.எ.இந்தியா அமைப்பின் தலைவா் தினேஷ் ஷியாம்சுந்தா் மற்றும் தானியங்கி ட்ரோன் டெவலப்மெண்ட் சேலஞ்ச் 2026 சாதனையாளா் ஆசிஷ் ஆகியோா் தானியங்கி ட்ரோன் பயன்பாடுகள் புதுவகையான தானியங்கி ட்ரோன்கள் வடிவமைப்பு மற்றும் மேம்பாடு குறித்து மாணவா்களிடையே சிறப்புரை ஆற்றினா். தொடா்ந்து மாணவ, மாணவிகள் தயாரித்த தானியங்கி ட்ரோன் கண்டுபிடிப்புகளை காட்சிக்கு வைத்திருந்தனா். அவற்றை பாா்வையிட்ட சிறப்பு விருந்தினா்கள் மாணவா்களைப் பாராட்டினா்.
தானியங்கி ட்ரோன்கள் செயல்திறன்கள், வடிவமைப்பு ஆகியவை குறித்து மாணவா்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் இந்தியா முழுவதும் இருந்து 1,000-க்கும் மேற்பட்ட மாணவா்கள் கலந்து கொண்டனா்.
ஏற்பாடுகளை கல்லூரி இயந்திரவியல்துறை பேராசிரியா் குழுவினா் செய்திருந்தனா். கல்லூரி இணை புலமுதல்வா் சிவக்குமாா் நன்றி கூறினாா்.