சென்னை

நாய்களுக்கு மருந்துக் குளியல் சிகிச்சை: கால்நடை மருத்துவக் கல்லூரியில் தொடக்கம்

சென்னை,ஜன. 27: சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை அறிவியல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், நாய்களுக்கான மருந்துக் குளியல், நீர் சிகிச்சைப் பிரிவு செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது.  நாய்களின் உடல் நலத்

தினமணி

சென்னை,ஜன. 27: சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை அறிவியல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், நாய்களுக்கான மருந்துக் குளியல், நீர் சிகிச்சைப் பிரிவு செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது.

 நாய்களின் உடல் நலத்தை நோய்த்தொற்றிலிருந்தும், பூச்சித் தொல்லைகளில் இருந்தும் பாதுகாக்க நாட்டிலேயே முதன்முறையாக இந்தப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.

 நம் நாட்டின் காலநிலை, நாய்களுக்கு ஒத்துப் போவதில்லை. இதனால் நாய்களுக்கு தோல் சம்பந்தப்பட்ட பொடுகு, அரிப்பு, புண்கள், தோலில் இருந்து எண்ணெய் போன்ற திரவம் வெளியாகுதல் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படும்.

 மேலும், நாய்களின் முடியில் சிறிய பூச்சிகள் தோன்றுதல், பூனைகளின் உடலில் உள்ள பூச்சிகள் நாய்களுக்குப் பரவி அதன் மூலம் நோய்த்தொற்றும் ஏற்படும்.

 இது போன்ற நோய்களுக்கு இந்தப் பிரிவின் மூலம் சிறப்பு நீர் சிகிச்சையும், மருந்துக் குளியல் சிகிச்சையும் வழங்கப்படும். இது குறித்து விலங்குகளுக்கான தோல்நோய் சிகிச்சை நிபுணரும் கல்லூரி பேராசிரியருமான டாக்டர் நாகராஜன்

 கூறியதாவது:

 வீட்டில் வளர்க்கப்படும் நாய்களும் மனிதனைப் போன்று மிகவும் மென்மையானது. சில நாய்களுக்கு உபயோகப்படுத்தும் ஷாம்புகள், உணவு, சில நேரங்களில் பூக்களில் உள்ள மகரந்தம்கூட ஒவ்வாமையை ஏற்படுத்தும்.

 இது போன்ற சமயங்களில் நாய்கள் தங்கள் உடலில் தானாகவே உமிழ்நீரை உமிழ்ந்து கொண்டே இருக்கும். இதனால் உடலில் அரிப்பு, புண்கள் போன்றவை ஏற்படும்.

 இந்த சிறப்புப் பிரிவில் நாய்களின் பிரச்னைகளைக் கண்டறிந்து அதற்கு ஏற்ப தனித்தனி மருந்துக் குளியல் கொடுக்கப்படும்.

 நாய்களை குளிப்பாட்டுவதற்கு முன்பு அதன் உதிர்ந்த முடி, உடலில் உதிரத் தயாராக இருக்கும் முடி அனைத்தும் சீவப்பட்டு தனியாக எடுக்கப்படும். அதன் பின்பு ஒரு தொட்டியில் நிறுத்தி அதன் உடல் நனைக்கப்படும்.

 நனைத்த பின்பு, அதற்குத் தேவையான மருந்து பூசப்பட்டு, 20 நிமிஷங்கள் ஊற வைக்கப்படும். அதன் பின்பு நுரை பொங்கும் வேறு ஒரு தொட்டியில் வைத்து குளிப்பாட்டப்படும். குளித்து முடித்த பின்பு "டிரையரி'ன் உதவியால் உடல் காய வைக்கப்படும்.

 ஒரு மாதத்தில் குணமாகும் நோய்களை இந்தக் குளியலின் மூலம் சுமார் 10 நாள்களிலேயே குணப்படுத்திவிடலாம். மிகக் குறைந்த செலவில் சிகிச்சை அளிக்கப்படுகிறது என்றார் டாக்டர் நாகராஜன்.

 காலை 8 மணி முதல் மாலை 3.30 மணி வரை இந்தப் பிரிவு இயங்கும். டாக்டர்களின் பரிந்துரைக்குப் பிறகே நாய்கள் சிகிச்சைக்கு அனுமதிக்கப்படும்.

 இந்த சிகிச்சைக்கு குறைந்தபட்சம் ரூ. 300 செலவாகும். இதே போன்று நாய்களின் உடலில் உள்ள சிறிய பூச்சிகளை அகற்றும் சிறப்புப் குளியலும் இதில் அடங்கும். இதற்கான கட்டணம் ரூ.50.

 முன்னதாக, கால்நடைத் துறையின் செயலர் நிர்மலா இந்தப் பிரிவை தொடங்கி வைத்தார். கால்நடை அறிவியல் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் டாக்டர் பிரபாகரன், சிகிச்சைத் துறைத் தலைவர் டாக்டர் சேது பிரதாபன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரா் டிஎஸ். டி சில்வா மறைவு

பெண் மருத்துவா் ஹிஜாப்பை அகற்றிய நிதீஷ் செயலுக்கு வலுக்கும் கண்டனம்

கோவையில் இன்று பிஎஸ்என்எல் ஓய்வூதியா் சங்க அகில இந்திய மாநாடு

சரிவில் முடிந்த பங்குச் சந்தை

வேலூா் தங்கக்கோயிலுக்கு இன்று குடியரசுத் தலைவா் வருகை

SCROLL FOR NEXT