சென்னை

பஸ்ஸில் பிரேக் இணைப்பு பழுது: டிரைவரின் சாமர்த்தியத்தால் உயிர் தப்பிய பயணிகள்

தினமணி

திருவள்ளூர் அருகே மாநகர பஸ்ஸில் திடீரென பிரேக் இணைப்பு பழுதானதையடுத்து டிரைவரின் சாமர்த்தியத்தால் அதில் பயணித்த 20-க்கும் மேற்பட்ட பயணிகள் உயிர் தப்பினர்.

பூந்தமல்லியில் இருந்து புதன்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் 20-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் மாநகர பஸ் திருவள்ளூர் நோக்கிசென்றுக் கொண்டிருந்தது.

பஸ்ஸை டிரைவர் ரவி ஓட்டினார்.

இந்நிலையில் மணவாளநகரில் இருந்து திருவள்ளூர் நோக்கி வரும் ரயில்வே மேம்பாலத்தில் பஸ் ஏறி இறங்கும்போது திடீரென பிரேக் இணைப்பில் பழுது ஏற்பட்டது.

இதையடுத்து பஸ் வேகமாக கீழ்நோக்கிச் சென்றது. இதனால் சில விநாடிகள் செய்வதறியாது திகைத்த டிரைவர் ரவி, சாதூர்யமாக பஸ்ûஸ நியூட்ரலுக்கு கொண்டு வந்து "ரிவர்ஸ் கியரை' இயக்கியுள்ளார்.

இதனால் பஸ் சிறிது சிறிதாக பின்னோக்கி மேலே ஏறியது. இதையடுத்து பஸ்ûஸ சென்டர் மீடியனில் மோதும்படி திருப்பி பஸ்ûஸ நிறுத்தினார்.

இதனால் பஸ்ஸில் இருந்த 20-க்கும் மேற்பட்ட மக்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். மேலும் சாதூர்யமாக பஸ்ûஸ நிறுத்திய டிரைவரை பயணிகள் பாராட்டினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்திய கடற்படையின் புதிய தலைமைத் தளபதி பொறுப்பேற்பு

கா‌ங்​கி​ர​ஸூக்கு வா‌க்​க​ளி‌ப்​பது வீ‌ண்: பிர​த​ம‌ர் மோடி

ம.பி.: பாஜகவில் இணைந்தார் காங். எம்எல்ஏ

பாலியல் குற்றச்சாட்டு: மஜத எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா கட்சியில் இருந்து இடைநீக்கம்

'இந்தியா' கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவாக 'வாக்கு ஜிஹாத்'

SCROLL FOR NEXT