முகப்பு
ஆர்.கே.நகர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் என்.மருதுகணேஷை ஆதரித்து ஞாயிற்றுக்கிழமை கொருக்குப்பேட்டை பகுதியில் பிரச்சாரம் செய்த அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்.
சென்னை

ஆர்.கே. நகரில் அடிப்படை வசதிகள் கூட நிறைவேற்றப்படவில்லை: ஸ்டாலின்

தொடர்ந்து அதிமுக வெற்றி பெற்ற ஆர்.கே. நகரில் அடிப்படை வசதிகள் கூட நிறைவேற்றப்படவில்லை என தி.மு.க. செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறினார்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 2:15 PM
ஆர்.கே.நகர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் என்.மருதுகணேஷை ஆதரித்து ஞாயிற்றுக்கிழமை கொருக்குப்பேட்டை பகுதியில் பிரச்சாரம் செய்த அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்.
பகிர்:

தொடர்ந்து அதிமுக வெற்றி பெற்ற ஆர்.கே. நகரில் அடிப்படை வசதிகள் கூட நிறைவேற்றப்படவில்லை என தி.மு.க. செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறினார்.

ஆர்.கே.நகர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் என்.மருது கணேஷை ஆதரித்து அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை கொருக்குப்பேட்டை பகுதியில் பிரச்சாரம் செய்தார். அப்போது ஸ்டாலின் பேசியது:
ஆர்.கே. நகர் தொகுதி மறைந்த முதல்வர் ஜெயலலிதா இருமுறை வெற்றி பெற்ற தொகுதி. மேலும், இங்கு அதிமுகதான் அதிக முறை தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளது. இருப்பினும், இத்தொகுதியில் குடிநீர், சுகாதாரம், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள்கூட இன்னும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. கச்சா எண்ணெய் குழாயில் ஏற்பட்ட கசிவால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு குடிநீருக்குத் திண்டாடும் அவல நிலை உள்ளது.
எனவே, மக்கள் பிரச்னைகளை முன்னிறுத்தி திமுக தேர்தலில் நிற்கிறது. மக்கள் பிரச்னைகளுக்காகவே சட்டப்பேரவையிலும், மக்கள் மன்றத்திலும் திமுக தொடர்ந்து போராடி வருகிறது. ஆனால், அதிமுகவின் இரு அணிகளில் ஒன்று பணத்தையும், மற்றொன்று மரணத்தையும் வைத்து தேர்தல் களத்தில் நிற்கின்றன.
அதிமுகவின் இரண்டு அணிகளையும் ஆர்.கே.நகர் மக்கள் தோற்கடிக்க வேண்டும்.
மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடைபெற்ற வருமான வரிச் சோதனை அடிப்படையில் தமிழக அமைச்சர்கள் மீது சி.பி.ஐ. விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றார் ஸ்டாலின்.

முழு கட்டுரையைப் படிக்க →