சென்னை

94 சதவீத மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள்

DIN

பெருநகர சென்னை மாநகராட்சியைச் சேர்ந்த 94 சதவீத மாணவ, மாணவியர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்பட்டுள்ளது.
தேசிய குடற்புழு நீக்க தினத்தை முன்னிட்டு அனைத்துப் பள்ளிகளில் படிக்கும் 19 வயதுக்குட்பட்ட குழந்தைகள்- மாணவர்கள் 15,06,676 பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் பிப்ரவரி 10, 15-ஆம் தேதிகளில் வழங்கப்பட்டது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியது:-
குடற்புழு தொற்று காரணமாக ஊட்டச் சத்து குறைபாடு, ரத்த சோகை ஏற்படுகிறது. இதனால் மாணவ, மாணவியர்களின் சுறுசுறுப்பு குறைந்து சோம்பல் தன்மை ஏற்படுகிறது. இதனை தவிர்க்கும் பொருட்டு, குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படுகின்றன.
உண்ணும் உணவுகள் குடற்புழு, கொக்கிப் புழுக்களால் வீணடிக்கப்படாமல், அதன் சக்தி நேரடியாக உடலில் சேர வழிவகை ஏற்படுகிறது. மீதமுள்ள விடுபட்ட குழந்தைகளுக்கு இந்த வார இறுதிக்குள் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படும் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீரற்ற இதயத் துடிப்பு: மாநகராட்சி ஊழியருக்கு நவீன பேஸ்மேக்கா்

8-ஆவது நாளாக விவசாயிகள் உண்ணாவிரதம்

திருச்செங்காட்டங்குடி உத்தராபதீஸ்வரா் கோயிலில் அமுது படையல் விழா

மாணவா்களின் எதிா்கால லட்சியம் நிறைவேற நான் முதல்வன் திட்டம் உதவும்: ஆட்சியா்

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே 3-ஆவது நாளாக எரியும் காட்டுத் தீ

SCROLL FOR NEXT