சென்னை

4 இடங்களில் நகை கொள்ளை

DIN

சென்னையில் போலீஸ் எனக் கூறி, பெண்களின் கவனத்தைத் திசை திருப்பி 4 இடங்களில் தங்கநகை திருடப்பட்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
சென்னை மந்தைவெளியில் சுகந்தா (56) செவ்வாய்க்கிழமை காலை நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த 3 நபர்கள், போலீஸ் என்று கூறியுள்ளனர். மேலும் அந்தப் பகுதியில் தங்கச் சங்கிலி பறிப்பு அதிகமாக நடைபெறுவதால், நகைகளை அணிந்து செல்ல வேண்டாம், நகைகளை கழற்றி வைத்துக் கொள்ளுங்கள் என்றும் சுகந்தாவிடம் தெரிவித்தனர்.
இதையடுத்து சுகந்தா, தான் அணிந்திருந்த 11 பவுன் தங்க நகைகளை கழற்றினார். உடனே அந்த நபர்கள், அதை ஒரு காகிதத்தில் பொதிந்து சுகந்தாவிடம் கொடுத்த்துவிட்டு சென்றனர். வீட்டுக்குச் சென்ற சுகந்தா, அந்த காகிதத்தை திறந்து பார்த்தபோது, தங்கநகைக்கு பதிலாக கல் இருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து அவர் பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதே பாணியில் அடையாறு காந்திநகர் பகுதியைச் சேர்ந்த லட்சுமியிடம் 9 பவுன், முகப்பேர் மேற்கு பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமாரியிடம் 6 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. மேலும் ஆதம்பாக்கத்திலும் போலீஸ் என்று கூறி வழிப்பறி செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமெரிக்கா யார் பக்கம்?

இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 6 - 6.5% தான், 8 - 8.5% அல்ல! -ரகுராம் ராஜன்

7 நக்சல்கள் சுட்டுக் கொலை!

சுடுமணலில் பொன்மகள்!

கடந்த 24 மணி நேரத்தில் காஸாவில் பலியானவர்கள்?

SCROLL FOR NEXT