வெள்ள நிவாரணப் பணிகளில் ராமகிருஷ்ணா மிஷன் மாணவர்கள்
நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சென்னை மயிலாப்பூரில் உள்ள ராமகிருஷ்ணா மிஷன் இல்லத்தைச் சேர்ந்த மாணவர்கள் நிவாரணப் பணியில் ஈடுபட்டனர்.
சென்னைவெள்ள நிவாரணப் பணிகளில் ராமகிருஷ்ணா மிஷன் மாணவர்கள்
நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சென்னை மயிலாப்பூரில் உள்ள ராமகிருஷ்ணா மிஷன் இல்லத்தைச் சேர்ந்த மாணவர்கள் நிவாரணப் பணியில் ஈடுபட்டனர்.
நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சென்னை மயிலாப்பூரில் உள்ள ராமகிருஷ்ணா மிஷன் இல்லத்தைச் சேர்ந்த மாணவர்கள் நிவாரணப் பணியில் ஈடுபட்டனர்.
வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்ததால் திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் கடந்த சில நாள்களுக்கு முன்பு கனமழை பெய்ததால் வயல்கள் நீரில் மூழ்கின.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் சென்னை மயிலாப்பூரில் உள்ள ராமகிருஷ்ணா மிஷன் இல்லத்தைச் சேர்ந்த மாணவர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் தொடர்ந்து மூன்று நாள்களாக நிவாரணப் பணிகளில் ஈடுபட்டனர்.
நிவாரணப் பணியின்போது திருவாரூர் மாவட்டம் அம்மையப்பன் ஊராட்சி, வடகரை, நாகப்பட்டினம் மாவட்டம் மோகனூர், தலைஞாயிறு உள்ளிட்ட கிராமங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு மூன்று வேளையும் உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.