சென்னை

கூரியர் நிறுவன ஊழியர் மூளைச்சாவு: உடலுறுப்புகள் தானம்

DIN

மூளைச்சாவு அடைந்த கூரியர் நிறுவன ஊழியரிடம் இருந்து 7 உடல் உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டன.
சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்த தனியார் கூரியர் நிறுவன ஊழியர் தினேஷ் (22). இவர், புதன்கிழமை (செப்.13) இரவுப் பணியில் இருந்தபோது, சாலையில் நின்று கொண்டிருந்தார். அப்போது வேகமாக வந்த கார் ஒன்று அவர் மீது மோதியது. இதில் காயமடைந்த அவர், அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரது பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
தீவிர சிகிச்சை அளித்தும் பயனளிக்காத நிலையில், அவர் மூளைச்சாவு அடைந்ததை மருத்துவர்கள் வெள்ளிக்கிழமை உறுதி செய்தனர். இதையடுத்து, தினேஷின் பெற்றோர் அவரது உடலுறுப்புகளை தானம் செய்ய சம்மதம் தெரிவித்தனர்.
இதனையடுத்து, அவரது சிறுநீரகங்கள், கண்கள், கல்லீரல், நுரையீரல், இதயம் ஆகிய 7 உறுப்புகள் தானம் பெறப்பட்டன. சிறுநீரகங்கள் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கும், கல்லீரல் ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் நோயாளிக்கும் பொருத்தப்பட்டது. கண்கள் எழும்பூர் அரசு கண் மருத்துவமனை வங்கியில் சேமிக்கப்பட்டுள்ளது.
நுரையீரல் மற்றும் இதயம், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்குத் தானமாக அளிக்கப்பட்டது என்று மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடற்படைத் தளபதியாகப் பொறுப்பேற்றார் தினேஷ் குமார் திரிபாதி

நாட்டாமை திரைப்பட பாணியில் நெல்லையில் ஊரைவிட்டு ஒதுக்கப்பட்ட குடும்பம்! பெண் கண்ணீர்!

பதஞ்சலி வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு: பாபா ராம்தேவ் ஆஜராவதில் விலக்கு!

12 ராசிக்கும் குருப்பெயர்ச்சி பலன்கள்!

பன்னுன் கொலை முயற்சி பின்னணியில் இந்திய புலனாய்வு அதிகாரிகள்: வாஷிங்டன் போஸ்ட்

SCROLL FOR NEXT