முகப்பு
சென்னை

மோட்டார் சைக்கிள் பந்தயம்: கல்லூரி மாணவர் இருவர் உள்பட 3 பேர் கைது

சென்னை, வேப்பேரியில் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்ட இரு கல்லூரி மாணவர்கள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:10 PM
பகிர்:

சென்னை, வேப்பேரியில் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்ட இரு கல்லூரி மாணவர்கள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
வேப்பேரி ஈ.வெ.ரா. சாலை, ரித்தர்டன் சாலை சந்திப்பில் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீஸார் மடக்கிப் பிடித்தனர். போலீஸாரின் விசாரணையில் அவர்கள் மூவரும், அரும்பாக்கம் தலைமைச் செயலக காலனி 1-ஆவது பிரதான சாலைப் பகுதியைச் சேர்ந்த ர.சஞ்சய் (24), அமைந்தகரை கலெக்டர் காலனி 6-ஆவது குறுக்குத் தெருவைச் சேர்ந்த அ. முகமது தகீம் (19), எருக்கஞ்சேரி ஈஸ்வரன் கோயில் தெருவைச் சேர்ந்த சு.விக்னேஷ் (21) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர். விக்னேஷ், முகமது தகீம் ஆகிய இருவரும் ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகின்றனர். சஞ்சய் ஒரு மோட்டார் சைக்கிள் விற்பனையகத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார் என போலீஸார் தெரிவித்தனர்.
 

முழு கட்டுரையைப் படிக்க →