சென்னை

கடைசி முகலாயன் வரலாற்று நிகழ்வுகளின் பதிவு

DIN

கடைசி முகலாயன் (ஓர் அரசகுலத்தின் வீழ்ச்சி, டெல்லி, 1857) இந்நூல், 1857 நடந்த கலவரத்தை முதல் இந்திய சுதந்திரப்போர் என்று சொல்லப்படுகிறது. ஆனால் அது முதல் சுதந்திரப்போர் அல்ல. அது சிப்பாய் கலகம்தான் என்பதை எடுத்துரைக்கிறது இந்நூல்.
வில்லியம் டேல்ரிம்பிள் எழுதிய நூல்களிலேயே அற்புதமான படைப்பு இந்த 'கடைசி முகலாயன்'. இது அன்றைய அரசர்கள், நாட்டியக்காரர்கள், வணிகர்கள் மற்றும் சிப்பாய்கள் என 4 பரிமாணங்களில் இந்த புத்தகம் எழுதப்பட்டிருக்கிறது. குழப்பமான சூழ்நிலைக்கு நடுவிலும் மக்கள் தங்களுடைய வாழ்க்கையை வாழ்ந்த விதத்தை ஆவணப்படுத்தியிருப்பதன் மூலம் வரலாற்று நிகழ்வுகளை தற்காலத்திய புரிதலோடு இந்த எழுத்தாளர் இணைத்திருக்கும் விதம்தான் இப்புத்தகத்தின் சிறப்பு.
அந்த காலத்தில் பிரிட்டிஷ் கலக ஆவணங்கள் என்ற அமைப்பு அப்போது நடந்தவற்றை எல்லாம் பதிவு செய்து வைத்துள்ளனர். அதன்மூலம் பிரிட்டிஷ் கவுன்சில் ஆஃப் லைப்ரரியில் இருந்து தரவுகளை எடுத்து இந்நூலை எழுதியிருக்கிறார் வில்லியம் டேல்ரிம்பிள். இப்புதக்கத்தைப் பொருத்தவரை அனைத்து தகவல்களுக்கும் உரிய தரவுகளை கடைசி 40 பக்கங்களுக்கு மேல் சொல்லப்பட்டிருக்கிறது. வரலாறு எப்படி எழுதப்பட வேண்டும் என்பதை கடைசி முகலாயன் காட்டியிருக்கிறது.
அரசர்களின் வறட்டுப் பிடிவாதம், போர்கள் மற்றும் உடன்படிக்கைகள் மட்டுமின்றி கடந்த காலத்தை நிகழ்காலத்துக்கு கொண்டு வந்து, நீண்டகாலத்துக்கு முன்னரே இறந்துவிட்ட கதாபாத்திரங்களுக்கு உயிர்கொடுத்து நம்மிடைய உலவவிட்டிருக்கிறது இந்நூல். மகிழ்ச்சி, கோபம், வருத்தம், கவலை என அனைத்தும் கலந்து டேல்ரிம்பிளின் புத்தகம் ஆழமான உணர்ச்சிகளைக் கிளர்ந்தெழச் செய்கிறது. 
எதிர்வெளியீடு பதிப்பகத்தின் வெளியீடாக, 712 பக்கங்களைக் கொண்ட கடைசி முகலாயன் (ஓர் அரசகுலத்தின் வீழ்ச்சி, டெல்லி, 1857) புத்தகத்தை தமிழில் மொழிபெயர்த்தவர் -இரா.செந்தில், விலை - ரூ. 750.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழை வேண்டி இஸ்லாமியல்கள் சிறப்புத் தொழுகை

ஏகனாபுரம் கிராமத்தினா் நூதன போராட்டம்

கள்ளச்சாராயம் காய்ச்சிய 3 போ் கைது

நீட் தோ்வு: தேனியில் 181 போ் எழுதினா்

சாலை விபத்தில் 2 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT