ஓய்வு பெற்ற நீதிபதியிடம் மோசடி: இளைஞர் கைது
ஓய்வு பெற்ற நீதிபதியிடம் ரூ.3.7 லட்சம் ஏமாற்றியதாக கொளத்தூரைச் சேர்ந்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
ஓய்வு பெற்ற நீதிபதியிடம் ரூ.3.7 லட்சம் ஏமாற்றியதாக கொளத்தூரைச் சேர்ந்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
கே.கே.நகர் டாக்டர் லட்சுமணசாமி சாலையைச் சேர்ந்தவர் ரங்கசாமி. ஓய்வு பெற்ற நீதிபதியான இவர் ஜெய் பாரத் அறக்கட்டளையை நடத்தி வந்தார். இவருக்குத் தேவையான பொருள்களை விநியோகிப்பதாகக் கூறி கொளத்தூரைச் சேர்ந்த கருணாகரன் (31) என்பவர் ரூ.16,11,575 -ம் பெற்றுக் கொண்டாராம். ஆனால் ரூ.12, 89,260-க்கு மட்டும் பொருள்களை விநியோகித்து விட்டு எஞ்சிய பணத்துக்கு பொருள்களை வழங்காமல் ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின்பேரில் திருமங்கலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து கருணாகரனை திங்கள்கிழமை கைது செய்தனர்.