முகப்பு
சென்னை

பருத்திப்பட்டு ஏரி: ஆக்கிரமிப்புகள் அகற்றம்

ஆவடியை அடுத்துள்ள பருத்திப்பட்டு ஏரியை சுற்றுலாப் பகுதியாக அழகுபடுத்துவதற்காக, ஏரியைச் சுற்றி இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் திங்கள்கிழமை நடைபெற்றன. 

Updated On : 22 மே, 2018 at 3:51 AM
ஆவடி அருகே பருத்திப்பட்டு ஏரியை சுற்றுலா தலமாக்கும் வகையில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள்.
பகிர்:

ஆவடியை அடுத்துள்ள பருத்திப்பட்டு ஏரியை சுற்றுலாப் பகுதியாக அழகுபடுத்துவதற்காக, ஏரியைச் சுற்றி இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் திங்கள்கிழமை நடைபெற்றன. 
பருத்திப்பட்டு ஏரியை சுத்தப்படுத்தி அதனை பாதுகாக்கும் வகையில் படகு ஓட்டம், பறவைகள் வந்து தங்கும் விதமாகவும், சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கும் வண்ணம் கலைநயத்துடன் பூங்கா அமைத்தல் உள்பட ரூ. 28 கோடி மதிப்பீட்டில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதற்கான பணிகள் தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்பொருள் துறை அமைச்சர் க.பாண்டியராஜனின் உத்தரவின்பேரில் மேற்கொள்ளப்பட இருக்கின்றன. அதோடு, இந்த ஏரியில் ஆவடி பகுதிக்கான குடிநீர்த் திட்டமும் செயல்படுத்தப்பட இருக்கிறது. 
இந்நிலையில், ஏரியின் 3 பக்கமும் பணிகள் நிறைவு பெற்ற நிலையில், 4 -ஆம் பக்கம் உள்ள ஆக்கிரமிப்புகளை, ஆவடி வட்டாட்சியர் மதன்குப்புராஜ் தலைமையில் வருவாய்த் துறையினர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் இருந்த குடியிருப்புகள் மற்றும் கடைகள் உள்ளிட்டவற்றை அவர்கள் அகற்றினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.