சென்னை

விபத்தில் சிக்கவிருந்த இளைஞரை மீட்ட ஆர்.பி.எஃப். வீரருக்கு பாராட்டு

DIN


சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட விரைவு ரயிலில் ஏறும்போது, ரயில் பெட்டிக்கும், நடைமேடைக்கும் இடையே தவறி விழுந்த இளைஞரை ரயில்வே பாதுகாப்புப் படை வீரர் (ஆர்பிஎஃப்) துரிதமாக செயல்பட்டு காப்பாற்றினார். விபத்தில் சிக்கவிருந்த இளைஞரை மீட்ட அந்த வீரரை ரயில்வே அதிகாரிகள் பாராட்டினர்.
ராமேசுவரத்தில் இருந்து அரியாணா மாநிலம், ஃபரீதாபாத்துக்கு திங்கள்கிழமை சர்க்கார் சேது விரைவு ரயில் புறப்பட்டது. இந்த ரயில் சென்னை, எழும்பூர் ரயில் நிலையத்தின் 5 -ஆவது நடைமேடையில் திங்கள்கிழமை நள்ளிரவு நின்று பயணத்தைத் தொடர்ந்தது. ரயில் புறப்பட்ட நிலையில், இளைஞர் ஒருவர் அவசரமாக அதில் ஏறுவதற்கு முயன்றார். அப்போது நிலைத்தடுமாறி நடைமேடைக்கும், ரயில் பெட்டிக்கும் இடையே அவர் சிக்கினார்.
அப்போது, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த ஆர்பிஎஃப் வீரர் சுமன், துரிதமாக செயல்பட்டு அந்த இளைஞரை வெளியே பிடித்து இழுத்து காப்பாற்றினார். அதைத் தொடர்ந்து அந்த இளைஞருக்கு முதலுதவி செய்யப்பட்டது. பின்னர் அந்த இளைஞர் அறிவுரை வழங்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டார். இதை அறிந்த ரயில்வே அதிகாரிகள், இளைஞரின் உயிரை துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய ஆர்பிஎஃப் வீரர் சுமனுக்கு பாராட்டு தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் நுழைவுத் தோ்வு: ஒருங்கிணைந்த வேலூரில் 6,787 போ் எழுதினா் விண்ணப்பித்தவா்களில் 255 போ் எழுதவில்லை

மரக்கன்றுகள் நடல்

கோடை சாகுபடிக்கு போதிய மின்சாரம் வழங்க வலியுறுத்தல்

தென்னை விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு: ஜி.கே.வாசன் கோரிக்கை

ராஜஸ்தானில் ‘நீட்’ தோ்வில் ஆள்மாறாட்டம்: எம்பிபிஎஸ் மாணவா், 5 போ் கைது

SCROLL FOR NEXT