முகப்பு
சென்னை

விமானத்தில் கடத்தி வந்த ரூ. 20 லட்சம் தங்கம் பறிமுதல்

சார்ஜாவில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் ரூ.20 லட்சம் மதிப்பிலான தங்கத்தை கடத்திய இளைஞரை சுங்கத் துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

Updated On : 23 அக்டோபர், 2018 at 4:19 AM
பகிர்:


சார்ஜாவில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் ரூ.20 லட்சம் மதிப்பிலான தங்கத்தை கடத்திய இளைஞரை சுங்கத் துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
சார்ஜாவில் இருந்து சென்னைக்கு திங்கள்கிழமை அதிகாலை பயணிகள் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, கேளத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரது நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது. அதையடுத்து, அவரை தனி அறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர். அந்த நபர் தனது உள்ளாடைக்குள் தங்கத்தை வைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. அவரிடமிருந்து மொத்தம் 600 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.20 லட்சம். இதையடுத்து அந்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.