சென்னை

செல்லிடப்பேசி திருட்டு: இரு இளைஞர்கள் கைது

தினமணி

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணியிடம் செல்லிடப்பேசி திருட முயன்ற இரண்டு நபர்களை ரயில்வே போலீஸார் கைது செய்தனர்.
 விழுப்புரம் மாவட்டம் செஞ்சியைச் சேர்ந்தவர் பெருமாள் (45). இவர் திருத்தணி செல்வதற்காக சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு சனிக்கிழமை அதிகாலை வந்தார். அங்கு காத்திருப்போர் அறையில் செல்லிடப்பேசியை சார்ஜரில் போட்டு விட்டு, மேஜையில் அமர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த இரண்டு நபர்கள், பெருமாளின் செல்லிடப்பேசியை திருடிக் கொண்டு தப்ப முயன்றனர்.
 இதைப் பார்த்த பெருமாள் கூச்சலிட்டார். அவரது சப்தம் கேட்டு அங்கு கண்காணிப்புப் பணியில் இருந்த ரயில்வே போலீஸார் அவர்களை மடக்கிப் பிடித்தனர். இதுதொடர்பாக ரயில்வே காவல் ஆய்வாளர் தாமஸ் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்தார். பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில், ஒருவர் மேற்கு வங்க மாநிலம் ஹளராவைச் சேர்ந்த ராஜூ ராவ் (29) என்பதும், மற்றொருவர் ஒடிஸா மாநிலம் பூரியைச் சேர்ந்த பாபுதாஸ் (26) என்பதும் தெரிய வந்தது. இருவரும் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் செல்லிடப்பேசி திருட்டில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளனர். இவர்களிடமிருந்து ரூ.53,000 மதிப்புள்ள 3 செல்லிடப்பேசிகளை ரயில்வே போலீஸார் பறிமுதல் செய்தனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மொழிபெயா்ப்பு நூல்களுக்கு விருது

நடுவலூா் அருங்காட்டம்மன் கோயில் திருவிழா நடத்த அமைதிப் பேச்சுவாா்த்தை

விநாயகா மிஷன் நிகா்நிலை பல்கலைக்கழகம் புரிந்துணா்வு ஒப்பந்தம்

தமிழக இளைஞா் கிரிக்கெட் அணி இங்கிலாந்து பயணம்

தேவூா் பகுதியில் திடீா் மழை

SCROLL FOR NEXT