சென்னை

ஏப்.27-இல் கிரேஸி மோகன் எழுத்தில் இசையுடன் கூடிய வெண்பா நிகழ்ச்சி

DIN

ஸ்ரீ ரமண மகரிஷியின் வாழ்க்கை குறித்து கிரேஸி மோகன் எழுதியுள்ள வெண்பா நிகழ்ச்சி கர்நாடக இசையுடன் சென்னையில் சனிக்கிழமை (ஏப். 27) நடைபெற உள்ளது.
இதுகுறித்து திரைப்பட இயக்குநரும், இந்நிகழ்ச்சியின் பொறுப்பாளருமான எஸ்.பி.காந்தன் கூறியதாவது: 
பிரபல நாடக ஆசிரியரும், நகைச்சுவை எழுத்தாளருமான கிரேஸி மோகன், ரமண மகரிஷியின் வாழ்க்கை குறித்து "ரமணாயணம்' என்ற தலைப்பில் வெண்பாக்களை எழுதி உள்ளார். இந்த வெண்பாக்களின் தொகுப்பு இ-புத்தகமாக ஏற்கெனவே வெளியாகி உள்ளது.
இந்த வெண்பாக்களை பொதுமக்கள் அனைவருக்கும் கொண்டு செல்லும் வகையில், கர்நாடக இசையுடன் கூடிய நிகழ்ச்சி சென்னை மயிலாப்பூரில் உள்ள  மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட் அரங்கில் சனிக்கிழமை (ஏப். 27) மாலை 6.30 மணிக்கு நடைபெற உள்ளது.  ராஜ்குமார் பாரதி இசையமைத்த வெண்பாக்களை கர்நாடக இசைக் கலைஞர் காயத்ரி கிரீஷ் பாடுகிறார்.
இந்த நிகழ்ச்சியில், "அமுதசுரபி' ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன், பரத நாட்டியக் கலைஞர் பத்மா சுப்பிரமணியம், இசைக் கலைஞர் ஜி.எஸ்.மணி, அம்பிகா காமேஸ்வர் ஆகியோர் கலந்துகொள்கின்றனர். இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி இலவசம் என்றார் எஸ்.பி.காந்தன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்திய முன்னாள் அமைச்சர் ஸ்ரீனிவாச பிரசாத் காலமானார்

தஞ்சாவூர் அருகே காய்கறி வியாபாரி வெட்டிப் படுகொலை

தப்பிக்க வழியே இல்லை: 3 நாள்களுக்கு வெப்ப அலை! அதன்பிறகு?

ஈரோடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் சிசிடிவி பழுது

சத்தீஸ்கரில் கோர விபத்து: நின்றிருந்த லாரி மீது டிரக் மோதியதில் 8 பேர் பலி

SCROLL FOR NEXT