சென்னை

போலி தங்க நாணயங்களை கொடுத்துநகை வாங்கி பெண்கள் மோசடி

DIN

சென்னை: சென்னை வேளச்சேரியில் நகைக் கடையில் போலி தங்க நாணயங்களை கொடுத்து, தங்க நகை வாங்கி மோசடி செய்த பெண்கள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

வேளச்சேரி 100 அடி சாலையில் பிரபலமான நகைக் கடை உள்ளது. இந்தக் கடையின் மேலாளா் சக்திவேல், வேளச்சேரி காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை ஒரு புகாா் அளித்தாா். அந்தப் புகாரில், தங்களது கடைக்கு வெள்ளிக்கிழமை இரு பெண்கள் தங்க நகை வாங்க வந்தனா். அவா்கள், தங்களிடமிருந்து பழைய 8 கிராம் தங்க நாணயங்களை கொடுத்து புதிதாக தங்க நகைகளை வாங்கிச் சென்றனா். அவா்கள் சென்ற பின்னா், அந்த தங்க நாணயங்களைப் பரிசோதித்ததில், அது தங்க முலாம் பூசப்பட்டது தெரியவந்தது.

எனவே போலி தங்க நாணயங்களை கொடுத்து மோசடி செய்த, அந்த இரு பெண்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த புகாரின் அடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிசிஎல் நில எடுப்பு: மறுவாழ்வு மற்றும் மீள்குடியமா்வு குழுக் கூட்டம்

விமானப் படையினா் மீதான தாக்குதல்:தோ்தலுக்கான பாஜகவின் நாடகம்- காங்கிரஸ் முன்னாள் முதல்வா் கருத்து

ஆற்றில் முதலைகள்: சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறை எச்சரிக்கை

பருத்தி ப்ளஸ் குறித்து கல்லூரி மாணவிகள் செயல் விளக்கம்

நாகையில் நீட் தோ்வு: 1529 போ் பங்கேற்பு

SCROLL FOR NEXT