சென்னை

சீர்மிகு நகரத் திட்டம்: சென்னைக்கு மத்திய அரசு ரூ.196 கோடி விடுவிப்பு

DIN


பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதியில் சீர்மிகு நகரத் திட்டத்தின்கீழ் வளர்ச்சிப் பணிக்காக ரூ. 196 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது.
இதுகுறித்து பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ஜி.பிரகாஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்தால் சீர்மிகு நகரமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 20 நகரங்களில் சென்னை மாநகரமும் ஒன்றாகும். 
இந்தத் திட்டத்தின்கீழ் சென்னை மாநகராட்சியில்  ரூ.947 கோடி மதிப்பில் 40 பணிகள் திட்டமிடப்பட்டு, இதுவரை ரூ.25 கோடி மதிப்பிலான 9 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. 
முக்கியமாக சென்னை மாநகர மக்கள் அடிப்படை வசதிகள் குறித்து புகார் தெரிவிக்கும் வகையில் நம்ம சென்னை என்ற செயலி உருவாக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது.  
28 பள்ளிகளில் மின்னணு வகுப்பறைகள், 8 பூங்காக்கள் மறுவடிவமைக்கப்பட்டுள்ளன. ரூ.491.86 கோடி மதிப்பிலான 22 திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன.  ரூ.191 கோடி மதிப்பிலான 4 திட்டங்கள் ஒப்பந்தம் கோரப்பட்டு பரிசீலனையில் உள்ளன. 
இந்தத் திட்டங்களுக்கு மத்திய அரசு தன் பங்களிப்பாக ரூ.196 கோடியை விடுவித்துள்ளதாக அதில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேதம் புதுமை செய்த பாரதி

உலகின் சிறந்த நாவல்கள்

ஓட்டுநர் இல்லாமல் இயங்கும் கனரக வாகனங்கள்!

வரப்பெற்றோம் (29-04-2024)

ஏன் கவர்ச்சி? மாளவிகா மோகனன் பதில்!

SCROLL FOR NEXT