சென்னை

ராயபுரம்-சென்னை கடற்கரை யார்டில் பராமரிப்பு பணி:  மார்ச் 30 வரை ரயில் சேவையில் மாற்றம்

 ராயபுரம் மற்றும் சென்னை கடற்கரை யார்டில் பராமரிப்பு பணி நடப்பதால், மார்ச் 30-ஆம் தேதிவரை ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

DIN


 ராயபுரம் மற்றும் சென்னை கடற்கரை யார்டில் பராமரிப்பு பணி நடப்பதால், மார்ச் 30-ஆம் தேதிவரை ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மார்ச் 28 முதல் மார்ச் 30-ஆம் தேதி வரை ரயில் சேவையில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள்:
கும்மிடிப்பூண்டி-சென்னை கடற்கரைக்கு இரவு 9.40 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில், வண்ணாரப்பேட்டை- சென்னை கடற்கரை இடையேயான பகுதி ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் மூர் மார்க்கெட் வளாக நிலையத்துக்கு  திருப்பிவிடப்படும்.
சென்னை கடற்கரை-அரக்கோணத்துக்கு அதிகாலை 1.20 மணிக்கு புறப்பட வேண்டிய மின்சார ரயில் திருப்பி விடப்பட்டு, 5 நிமிஷம் தாமதமாக மூர்மார்க்கெட் வளாகத்தில் இருந்து புறப்பட்டுச் செல்லும்.
அரக்கோணம்-வேளச்சேரிக்கு அதிகாலை 4 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டு வேளச்சேரிக்கு பதிலாக மூர்மார்க்கெட் வளாகத்துக்கு வந்தடையும்.
ஆவடி-வேளச்சேரிக்கு காலை 8.15 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் திருப்பிவிடப்பட்டு, வேளச்சேரிக்கு பதிலாக மூர்மார்க்கெட் வளாக ரயில் நிலையத்தை வந்தடையும்.
பட்டாபிராம் ராணுவ பகுதி - வேளச்சேரிக்கு காலை 8.45 புறப்படும் மின்சார ரயில் திருப்பிவிடப்பட்டு, மூர் மார்க்கெட் வளாகத்தை அடையும். 
திருவள்ளூர்-வேளச்சேரிக்கு காலை 8.50, மாலை 5.55 மணிக்கு இயக்கப்படும்  மின்சார ரயில் திருப்பிவிடப்பட்டு, வேளச்சேரிக்கு பதிலாக மூர்மார்க்கெட் வளாகத்தை வந்தடையும். 
அரக்கோணம்-வேளச்சேரிக்கு மாலை 4.15 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் திருப்பிவிடப்பட்டு, வேளச்சேரிக்கு பதிலாக மூர் மார்க்கெட் வளாகத்தை வந்தடையும். 
சூலூர்பேட்டை- வேளச்சேரிக்கு காலை 7.25 மணிக்கு இயக்கப் படும் மின்சார ரயில் திருப்பி விடப்பட்டு வேளச்சேரிக்குப் பதிலாக மூர் மார்க்கெட் வளாகத்தை அடையும்.
கும்மிடிப்பூண்டி-வேளச்சேரிக்கு காலை 8.50 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் திருப்பிவிடப்பட்டு, வேளச்சேரிக்கு பதிலாக மூர்மார்க்கெட் வளாகத்தை அடையும்.
கும்மிடிப்பூண்டி- சென்னை கடற்கரைக்கு இரவு 9.40 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் திருப்பிவிடப்பட்டு வேளச்சேரிக்கு பதிலாக மூர்மார்க்கெட் வளாகத்தை வந்தடையும்.
ரத்து செய்யப்படும் ரயில்கள்: 
ஆவடி-வேளச்சேரிக்கு அதிகாலை 4.10, 6.05, 7.10, 8.45, பகல் 12.10, பிற்பகல்  2.40, மாலை 4.20, 4.40, 5.50 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.
ஆவடி-திருவள்ளூருக்கு அதிகாலை 4.25 இயக்கப்படும் மின்சார ரயில் ரத்து செய்யப்படுகிறது.
திருவள்ளூர் - வேளச்சேரிக்கு  முற்பகல் 11.05, மதியம் 1.40 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில் ரத்து செய்யப்படுகிறது. வேளச்சேரி -ஆவடிக்கு இரவு 8.25, 8.30, 9.50, இரவு 10.30 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில் ரத்து செய்யப்படுகின்றன. இதுதவிர, சில ரயில்கள் பகுதியாகவும் ரத்தும் செய்யப்படுகின்றன.
இந்தத் தகவல் தெற்கு ரயில்வே செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரா் டிஎஸ். டி சில்வா மறைவு

பெண் மருத்துவா் ஹிஜாப்பை அகற்றிய நிதீஷ் செயலுக்கு வலுக்கும் கண்டனம்

கோவையில் இன்று பிஎஸ்என்எல் ஓய்வூதியா் சங்க அகில இந்திய மாநாடு

சரிவில் முடிந்த பங்குச் சந்தை

வேலூா் தங்கக்கோயிலுக்கு இன்று குடியரசுத் தலைவா் வருகை

SCROLL FOR NEXT