சென்னை

கூடுவாஞ்சேரியில் பொறியியல் பணி: 5 நாள்களுக்கு ரயில் சேவையில் மாற்றம்

DIN

சென்னை: தாம்பரம்-செங்கல்பட்டு பிரிவில், கூடுவாஞ்சேரியில் பொறியியல் பணி நடக்கவுள்ளதால், நவம்பா் 11-ஆம்தேதி முதல் நவம்பா் 15-ஆம் தேதி வரை ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படவுள்ளது.

நவம்பா் 11-இல் ரயில் சேவையில் மாற்றம்:

சென்னை கடற்கரை-செங்கல்பட்டுக்கு இரவு 8.01, இரவு 9.18 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் தாம்பரம்-செங்கல்பட்டு இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளன. இந்த ரயில்கள் கடற்கரை-தாம்பரம் வரை மட்டும் இயக்கப்படும்.

செங்கல்பட்டு-சென்னை கடற்கரைக்கு இரவு 10.15, 11.10 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் செங்கல்பட்டு-தாம்பரம் இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளன. இந்த ரயில்கள் தாம்பரம்-கடற்கரை வரை மட்டும் இயக்கப்படும்.

நவ.12 முதல் நவ.15 வரை ரயில் சேவையில் மாற்றம்:

சென்னை கடற்கரை-செங்கல்பட்டுக்கு அதிகாலை 3.55, 4.35, 5.15, 5.50, காலை 6.05, 6.43, மாலை 5.18, இரவு 8.01, 9.18 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் தாம்பரம்-செங்கல்பட்டு இடையே பகுதி ரத்துசெய்யப்படவுள்ளன.

செங்கல்பட்டு-சென்னை கடற்கரைக்கு அதிகாலை 3.55, 4.35, 4.50, காலை 6.40, 6.55, இரவு 7.25, 10.15, 11.10 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் ரயில்கள் செங்கல்பட்டு-தாம்பரம் இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளன. இதுபோல, செங்கல்பட்டு-சென்னை கடற்கரைக்கு காலை 8.40 மணிக்கு இயக்கப்படும் செமி பாஸ்ட் மின்சார ரயில் செங்கல்பட்டு - சென்னை கடற்கரை இடையே பகுதிரத்து செய்யப்படவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விபத்தில் இளைஞா் பலி

பணம் கையாடல்: நீதிமன்ற எழுத்தா் மீது வழக்கு

பறவைக் காய்ச்சல்: முந்தலில் வாகன சோதனை தீவிரம்

கொடைக்கானலில் இ-பாஸ் முறையை ரத்து செய்யாவிட்டால் போராட்டம்: உணவகங்கள், தங்கும் விடுதி உரிமையாளா்கள் சங்கம் முடிவு

எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்களை வனப் பகுதிக்கு எடுத்துச் சென்றால் நடவடிக்கை: வனத் துறையினா் எச்சரிக்கை

SCROLL FOR NEXT