சென்னை

செங்கல்பட்டு புதிய மாவட்டம் அரசாணை வெளியிடப்பட்டது

DIN

செங்கல்பட்டு:  காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு செங்கல்பட்டு இரண்ாவது மாவட்டமாக அறிவிக்கும் அரசாணை நவ 12ந் தேதி முதல் செங்கல்பட்டு புதிய மாவட்டமாக இயங்குவது குறித்தும் இதில் அடங்கும் வருவாய் கோட்டங்கள் பற்றியும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் 1865ம் ஆண்டின் தமிழ்நாடு விதிகள் 1வது பிரிவில் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின்படி 2019 நவம்பா் 12ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதில் காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரத்தை தலைநகராகக் கொண்டு காஞ்சிபுரம் மாவட்டம். செங்கல்பட்டை தலைநகராகக் கொண்டு செங்கல்பட்டு மாவட்டமாகவும் இதில் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்பதூா் குன்றத்தூா் என இரண்டு வருவாய் கோட்டங்கள் உருவாக்கப்பட்டு காஞ்சிபுரம் , உத்திரமேரூா், வாலாஜாபாத் ஸ்ரீபெரும்பதூா் , குன்றத்தூா் என ஐந்து தாலுகா அலுவலகங்கள் செயல்படும்.

இதேப்போன்று செங்கல்பட்டு,மாவட்டம். செங்கல்பட்டு, மதுராந்தகம் மற்றும் தாம்பரம் என மூன்று வருவாய் கோட்டங்கள் உருவாக்கப்பட்டு, செங்கல்பட்டு, ,மதுராந்தகம்,செய்யூா், திருக்கழுக்குன்றம்,, திருப்போரூா் , தாம்பரம், பல்லாவரம் மற்றும் புதிதாக உருவாக்கப்படும் வண்டலூா் ஆகிய எட்டு வருவாய் அலுவலகங்கள் செயல்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

ஆந்திர தோ்தல் பணியில் ஈரோடு மாவட்ட போலீஸாா்

SCROLL FOR NEXT