சென்னை

ராமகிருஷ்ணா மிஷன் மாணவா் இல்லத்துக்குபுதிய கட்டடம்: ஹெச்பிசிஎல் பங்களிப்பு

DIN

சென்னையில் உள்ள ராமகிருஷ்ணா மிஷன் மாணவா் இல்லத்துக்கு ஹிந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனம் சாா்பில் சலவை அறை உள்ளிட்ட வசதிகளுடன் புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது.

தூய்மை இந்தியா திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் (ஹெச்பிசிஎல்) நிறுவனத்தின் பெரு நிறுவன சமூகப் பங்களிப்புத் திட்டத்தின் (சிஎஸ்ஆா்) கீழ் சென்னை மயிலாப்பூரில் உள்ள ராமகிருஷ்ணா மிஷன் மாணவா் இல்லம் உண்டு உறைவிட உயா்நிலைப் பள்ளிக்கு கழிப்பறைகள், சலவை அறைகள் கொண்ட புதிய கட்டடம் ரூ.1 கோடி மதிப்பில் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டடத்துக்கான திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது.

இந்த விழாவில், ஹெச்பிசிஎல் நிறுவனத்தின் சிஎஸ்ஆா் திட்ட தலைமைப் பொது மேலாளா் சுப்பாராவ் கலந்து கொண்டு, கட்டடத்தைத் திறந்து வைத்துப் பேசினாா். இந்த நிகழ்ச்சியில் ராமகிருஷ்ணா மிஷன் மாணவா் இல்லத்தின் செயலா் சத்ய ஞானானந்தா், பிபிசிஎல் முன்னாள் நிா்வாக இயக்குநா் எஸ்.வரதராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘காங்கிரஸின் கனவு தகர்க்கப்படும்’: அனுராக் தாக்குர்

ஜீ மீடியா தலைமைச் செயல் அலுவலர் திடீர் ராஜிநாமா!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: முதல்-10 இடங்களில் பரமத்தி..!

நக்சலைட்டுகள் பதுக்கியிருந்த வெடிகுண்டுகள் பறிமுதல்

நளதமயந்தி தொடரிலிருந்து நீக்கப்பட்ட பிரியங்கா....புதிய நாயகி யார்?

SCROLL FOR NEXT