முகப்பு
சென்னை

நீட் தேர்வில் ஆள் மாறாட்டம்: சென்னையில் விசாரணை

நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து முறைகேட்டில் ஈடுபட்ட வழக்குத் தொடர்பாக தேனி போலீஸார், சென்னையில் வியாழக்கிழமை

Updated On : 31 ஜனவரி, 2024 at 10:08 AM
பகிர்:


நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து முறைகேட்டில் ஈடுபட்ட வழக்குத் தொடர்பாக தேனி போலீஸார், சென்னையில் வியாழக்கிழமை விசாரணை செய்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: சென்னை தேனாம்பேட்டை பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் மகன் உதித் சூர்யா. இவர் தேனி மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். முதலாமாண்டு படித்து வருகிறார். இந்நிலையில் உதித் சூர்யா, நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து தேர்ச்சி பெற்றிருப்பதாக அந்தக் கல்லூரி நிர்வாகத்துக்கு அண்மையில் மின்னஞ்சல் மூலம் புகார் வந்தது.
இதையடுத்து  கல்லூரி நிர்வாகம் சார்பில் தேனி மாவட்ட காவல்துறையில் புகார் செய்யப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் போலீஸார் இரு பிரிவுகளின் கீழ் உதித் சூர்யா மீதும், அவருக்கு பதிலாக தேர்வு எழுதிய நபர் மீதும் வழக்குப் பதிவு செய்தனர்.
போலீஸார் நடத்திய விசாரணையில், உதித் சூர்யா ஏற்கெனவே இரு முறை நீட் தேர்வு எழுதி தோல்வியடைந்ததினால், மூன்றாவது முறையும் தோல்வியடைந்துவிட்டால் மருத்துவம் படிக்க முடியாது என்பதால், உதித் சூர்யாவும், அவரது பெற்றோரும் இணைந்து ஏற்கெனவே நீட் தேர்வு தேர்ச்சி பெற்ற ஒரு நபரை ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுத வைத்திருப்பதும், முறைகேட்டில் சிக்காமல் இருப்பதற்கு மும்பையில் தேர்வு எழுதியிருப்பதும் தெரியவந்துள்ளது.
சென்னையில்  விசாரணை:  இந்நிலையில், தேனாம்பேட்டையில் உள்ள உதித் சூர்யா வீட்டுக்கு தேனி மாவட்ட காவல்துறையின் தனிப்படை போலீஸார் வியாழக்கிழமை வந்தனர். உதித் சூர்யா வீடு புதன்கிழமை முதல் பூட்டப்பட்டிருந்ததால், அந்தஅடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் நபர்களிடம் விசாரணை செய்தனர். அதேபோல சென்னையில் வசிக்கும் உதித் சூர்யாவின் உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரிடமும் தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தியதாகக் கூறப்படுகிறது.இந்த வழக்கில் தலைமறைவாக இருக்கு உதித் சூர்யாவையும், அவருக்கு பதிலாக தேர்வு எழுதிய நபரையும் போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments