முகப்பு
இந்தியா

இரண்டாம் தர குடிமக்களா நாங்கள்? - ஜம்மு-காஷ்மீர் காங்கிரஸ் தலைவர்!

ஜம்மு-காஷ்மீர் மக்களை இரண்டாம் தர குடிமக்களாக மத்திய அரசு நடத்துகிறது: காங்கிரஸ் விமர்சனம்

Updated On : 5 ஏப்ரல், 2026 at 4:43 PM
ஜம்மு-காஷ்மீர் காங்கிரஸ் தலைவர் - @INCJammuKashmir
பகிர்:

ஜம்மு-காஷ்மீர் மக்களை இரண்டாம் தர குடிமக்களாக மத்திய அரசு நடத்துகிறது என்று காங்கிரஸ் விமர்சனம் சுமத்தியுள்ளது.

ஜம்முவின் கௌ மன்ஹாசன் பகுதியில் நடைபெற்ற பேரணியில் கலந்துகொண்ட ஜம்மு-காஷ்மீர் பிரதேச காங்கிரஸ் கமிட்டி (ஜேகேபிசிசி) தலைவர் தாரிக் ஹமீது கர்ரா மத்திய அரசை கடுமையாக விமர்சித்துப் பேசினார்.

“ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசொன்று அமைந்திருந்தபோதிலும், துணைநிலை ஆளுநர் வழியாக மத்திய அரசு ஜம்மு-காஷ்மீர் தொடர்பான விவகாரங்களில் முக்கிய முடிவுகளை எடுக்கிறது.

Advertisement

பிரதமர் நரேந்திர மோடி சத்தமே இல்லாமல் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் வழிகாட்டுதல்களைக் கேட்டு நடக்கிறார். இந்திய விடுதலைக்குப்பின் இந்த நாட்டில் இப்படி நடந்ததேயில்லை.

ஜம்மு-காஷ்மீருக்கான மாநில உரிமை நிராகரிக்கப்படுவதன் மூலம் இங்குள்ள மக்களை இரண்டாம் தர குடிமக்களாக மத்திய அரசு நடத்துகிறது” என்றார்.

summary

Centre treating J-K people as 'second-class citizens': Congress chief

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments