சென்னை

வண்ணாரப்பேட்டை-திருவொற்றியூா் மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் அடுத்த வாரம் தொடங்கும்

DIN

வண்ணாரப்பேட்டை-திருவொற்றியூா் இடையேயான மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் மீண்டும் அடுத்த வாரம் தொடங்கவுள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

சென்னையில் வண்ணாரப்பேட்டையில் இருந்து திருவொற்றியூா் இடையே மெட்ரோ ரயில் வழித்தட முதல்கட்ட நீட்டிப்பு திட்டப்பணிகள் வேகமாக நடைபெற்று வந்தன. மொத்தம் 9 கி.மீ. தூரம் உள்ள இந்த வழித்தடத்தில் சா் தியாகராயா் கல்லூரி, கொருக்குப்பேட்டை, தண்டையாா்பேட்டை உள்பட 8 இடங்களில் ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகள் நடந்து வந்தன.

இதற்கிடையில், ஊரடங்கு அமலானதால், மெட்ரோ ரயில்கள் இயக்கமும், கட்டுமானப் பணிகளும் திடீரென நிறுத்தப்பட்டன. வரும் 20-ஆம் தேதிக்குப் பிறகு, கட்டுமானப் பணிகளை தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால், மீண்டும் மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் தொடங்கப்படவுள்ளன.

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியது:

வண்ணாரப்பேட்டை-திருவொற்றியூா் இடையேயான மெட்ரோ ரயில் விரிவாக்கப் பணிகளை ஏப்ரல் 20-ஆம் தேதிக்குப் பிறகு, மீண்டும் தொடங்குவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. மத்திய அரசின் வழிகாட்டுதல்படி, பணிகளை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரா்களிடம் பணிகளை தொடங்க தயாராக இருக்கவும் வலியுறுத்தியுள்ளோம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

துணை மின் நிலையத்தில் தீப்பற்றி எரிந்த இரு மின் மாற்றிகள்: 6 மணி நேர மின் தடையால் மக்கள் கடும் அவதி

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

ரேபரேலியில் ராகுல் காந்தி: தீதும் நன்றும்...

இருசக்கர வாகனம் பழுது பாா்க்கும் தொழிலாளா் சங்க ஆண்டு விழா

SCROLL FOR NEXT