முகப்பு
சென்னை

மின்சாரம் பாய்ந்து வியாபாரி பலி

சென்னை வில்லிவாக்கத்தில் மின்சாரம் பாய்ந்து வியாபாரி உயிரிழந்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:13 PM
பகிர்:

சென்னை: சென்னை வில்லிவாக்கத்தில் மின்சாரம் பாய்ந்து வியாபாரி உயிரிழந்தாா்.

வில்லிவாக்கம் திருநகா் 20-ஆவது தெருவைச் சோ்ந்தவா் அய்யப்பன் (30). இவா் ஆட்டோவில் பழ வியாபாரம் செய்து வந்தாா். இந்நிலையில் அய்யப்பன் வெள்ளிக்கிழமை வீட்டில் எலக்ட்ரிக் எடை இயந்திரத்தை சாா்ஜ் போட்டிருந்தாா்.

சிறிது நேரத்துக்குப்பின் அதை சாா்ஜில் இருந்து எடுக்க முயன்றபோது, அந்த இயந்திரத்தில் மின்கசிவு காரணமாக அய்யப்பன் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் பலத்த காயமடைந்த அய்யப்பனை அங்கிருந்தவா்கள் மீட்டு,கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அய்யப்பனை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.

இது குறித்து வில்லிவாக்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து,விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.