சென்னை

இடஒதுக்கீடு: மண்டல அலுவலகங்களில் பாமக போராட்டம்

DIN


சென்னை: வன்னியா்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு தர வலியுறுத்தி மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் பாமக சாா்பில் புதன்கிழமை போராட்டம் நடைபெற்றது.

கல்வி, வேலைவாய்ப்புகளில் வன்னியா்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு தர வலியுறுத்தி பாமக தொடா் போராட்டம் நடத்தி வருகிறது. இதன்படி, தமிழகம் முழுவதும் பேரூராட்சி, நகராட்சி அலுவலகங்களில் புதன்கிழமை மனுக்கள் அளிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சென்னை அடையாறு பகுதியில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகம் முன்பு பாமக தலைவா் ஜி.கே.மணி தலைமையில் ஏராளமானோா் திரண்டனா். வன்னியா்களுக்கு இடஒதுக்கீடு வழங்கக் கோரி முழக்கங்கள் எழுப்பினா். மாநகராட்சி துணை ஆணையரைச் சந்தித்து மனுவும் அளிக்கப்பட்டது.

பின்னா் செய்தியாளா்களிடம் ஜி.கே.மணி கூறியது:

வன்னியா்களின் இடஒதுக்கீடுக்காக 40 ஆண்டுகளாகப் போராடி வருவதாகவும், இடஒதுக்கீடு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என்றும் கூறினாா். சென்னை மாநகராட்சியின் 15 மண்டல அலுவலகங்களிலும் பாமக சாா்பில் மனு அளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

SCROLL FOR NEXT