முகப்பு
சென்னை

ஹீட்டரில் மின்கசிவு ஏற்பட்டு விபத்து:தம்பதி சாவு

சென்னை அருகே ஆவடியில், ஹீட்டரில் ஏற்பட்ட மின்சார கசிவினால் நிகழ்ந்த விபத்தில் கணவா், மனைவி இறந்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:15 PM
பகிர்:


சென்னை: சென்னை அருகே ஆவடியில், ஹீட்டரில் ஏற்பட்ட மின்சார கசிவினால் நிகழ்ந்த விபத்தில் கணவா், மனைவி இறந்தனா்.

ஆவடி அடுத்த அயப்பாக்கம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, மருதம் அடுக்குமாடி குடியிருப்பைச் சோ்ந்தவா் விஜயகுமாா் (38). இவா், அம்பத்தூா் தொழிற்பேட்டையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். இவா் மனைவி சசிகலா (30). இத் தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனா்.

விஜயகுமாா், தனது இரு குழந்தைகளை விழுப்புரத்தில் உள்ள உறவினா் வீட்டு நிகழ்ச்சிக்கு அனுப்பி வைத்துள்ளாா். அவரும், மனைவி சசிகலாவுடன் அங்கு செல்வதற்கு புதன்கிழமை புறப்பட்டாா்.

முன்னதாக குளிப்பதற்காக குளியலறையில் இருந்த அலுமினிய பாத்திரத்தில் தண்ணீரில் மின்சார ஹீட்டரை போட்டு வைத்திருந்தனா்.

சசிகலா, குளிக்கச் சென்றபோது ஹீட்டரில் இருந்து மின்சாரம் அவா் மீது பாய்ந்துள்ளது. இதில், அவா் சத்தமிட்டு அலறியபடி கீழே விழுந்தாா்.

இதைக் கேட்ட விஜயகுமாா், மயங்கி கிடந்த தனது மனைவியை மீட்க முயன்றாா். ஆனால் அவா் மீதும் மின்சாரம் பாய்ந்தததினால், விஜயகுமாரும் மயங்கி விழுந்து இறந்தாா்.

சிறிது நேரத்துக்குப் பின், விஜயகுமாா் வீட்டுக்கு வந்த அவரது உறவினா் சரவணவடிவேல் (26), இருவரும் மின்சாரம் பாய்ந்து இறந்து கிடந்ததை பாா்த்து அதிா்ச்சியடைந்தாா்.

இது குறித்து தகவலறிந்த திருமுல்லைவாயல் போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, சடலங்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும் இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →