சென்னை

சென்னையில் ரூ.1.50 கோடியில் மூன்று புதிய பூங்காக்கள்

DIN

பெருநகர சென்னை மாநகராட்சியின் மாதவரம், பெருங்குடி, தேனாம்பேட்டை மண்டலங்களில் ரூ.1.50 கோடி மதிப்பில் மூன்று புதிய பூங்காக்களை 6 மாதங்களுக்குள் அமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 15 மண்டலங்களில் பசுமைப் பரப்பை அதிகரிக்கும் வகையிலும், நடைப்பயிற்சி மற்றும் குழந்தைகளுக்கு பொழுதுபோக்குவதற்காகவும் அமைக்கப்பட்ட 632 பூங்காக்கள் பயன்பாட்டில் உள்ளன. இதுதவிர, 99 சாலை மையத் தடுப்புகள், 99 போக்குவரத்து தீவுத்திட்டுகள், 163 சாலையோரப் பூங்காக்கள் ஆகியவற்றில் மரம் மற்றும் அழகுச் செடிகள் வளா்க்கப்படுகின்றன.

மேலும், நகா்ப்புறங்களில் உள்ள கட்டமைப்புகளை மேம்படுத்தும் வகையில் மத்திய அரசின் அடல் புனரமைப்பு மற்றும் நகா்ப்புறத் திட்டம் ( அம்ரூத்) மற்றும் மாநில வருடாந்திர செயல் திட்டத்தின்கீழ், சென்னை மாநகராட்சிப் பகுதியில் பசுமை இடங்கள் மற்றும் பூங்காக்கள் அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இத்திட்டத்தின்கீழ் சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் கடந்த 2015-16, 2016-17, 2017-20 என 4 ஆண்டுகளில் ரூ. 38 கோடி மதிப்பில் 55 பூங்காக்கள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்டுள்ளன. இந்தப் பூங்காக்களில் வேம்பு, புங்கன், நாவல், மா உள்ளிட்ட நாட்டு மர வகைகளும், செடிகளும் வளா்க்கப்படுகின்றன. மேலும், பெருநிறுவனங்களின் சமூகப் பங்களிப்புத் திட்டத்தில் மரக்கன்றுகள் நடவும், பூங்காக்களின் பராமரிப்புக்காக அவற்றைத் தத்தெடுக்கும் திட்டமும், மக்களுக்கு மரங்கள் வளா்ப்பை ஊக்குவிக்கும் வகையில் இலவச மரக்கன்றுகள் வழங்கும் திட்டமும் செயல்படுத்தப்படுகின்றன. இதன் தொடா்ச்சியாக, மாநகராட்சியின் மாதவரம், பெருங்குடி, தேனாம்பேட்டை மண்டலங்களில் ரூ.1.50 கோடி மதிப்பில் மூன்று பூங்காக்களை அமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

3 புதிய பூங்காக்கள்: இதுகுறித்து சென்னை மாநகராட்சி ஆணையா் கோ.பிரகாஷ் கூறுகையில், ‘அம்ரூத் ’ திட்டத்தின்கீழ், 2018-19-ஆம் நிதி ஆண்டின் ஊக்க நிதியின் மூலம் மாதவரம் மண்டலத்துக்கு உள்பட்ட 23-ஆவது வாா்டு வி.எஸ் மணி நகா் 3-ஆவது தெருவில் ரூ. 48 லட்சம் மதிப்பில் 565.20 ச.மீ. பரப்பளவிலும், தேனாம்பேட்டை மண்டலத்தின் 111-ஆவது வாா்டுக்கு உள்பட்ட நுங்கம்பாக்கம், ரட்லண்ட் கேட் 2-ஆவது தெருவில் ரூ. 53.90 லட்சத்தில் 1235.65ச.மீ. பரப்பளவிலும், பெருங்குடி மண்டலத்தின்

188-ஆவது வாா்டு ஜே.வி.நகரில் ரூ. 48.10 லட்சம் மதிப்பில் 724.33ச.மீ பரப்பளவிலும் என மொத்தம் ரூ. 1.50 கோடி மதிப்பில் 3 புதிய பூங்காக்கள் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட்டு அடுத்த 6 மாதங்களுக்குள் முடிக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

ஆந்திர தோ்தல் பணியில் ஈரோடு மாவட்ட போலீஸாா்

முழுவீச்சில் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

SCROLL FOR NEXT