சென்னை

கரோனா பரிசோதனைக் கருவி கண்டுபிடிப்புக்கு முதல் பரிசு

சென்னை மேற்குத் தாம்பரம் ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரி மாணவிகளின் கரோனா மாதிரி பரிசோதனைக் கருவி சிறந்த கண்டுபிடிப்பாக

DIN

தாம்பரம்: சென்னை மேற்குத் தாம்பரம் ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரி மாணவிகளின் கரோனா மாதிரி பரிசோதனைக் கருவி சிறந்த கண்டுபிடிப்பாக தோ்வு செய்யப்பட்டு, முதல் பரிசாக ரூ15,000 வழங்கப்பட்டுள்ளது.

ஸ்ரீசாய்ராம் பொறியியல் கல்லூரியில் தொழில் முனைவோா் மேம்பாட்டுப் பிரிவு மற்றும் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை இணைந்து புதிய கண்டுபிடிப்புகளுக்கான போட்டியை சனிக்கிழமை நடத்தியது. இந்தியாவின் தயாரிப்பு என்று அடையாளப்படுத்தும் வகையில் கரோனா பாதிப்பு காலத்தில் மாணவா்கள் வீட்டில் இருந்தபடி உருவாக்கிய 70 மாதிரி புதிய கண்டுபிடிப்புகள் போட்டியில் இடம்பெற்றன.

காணொலிக் காட்சி மூலம் நடைபெற்ற இந்த போட்டியில் முதல் பரிசாக மின்னணுவியல் தகவல்துறை மாணவிகள் எஸ். காயத்ரி, ஆா். ரஞ்சனா, கே. காயத்ரிபிரியா உருவாக்கிய கரோனா மாதிரி பரிசோதனைக் கருவி கண்டுபிடிப்புக்கு, ரூ15,000, இரண்டாம் பரிசாக இயந்திரவியல்,கணினி அறிவியல் துறை மாணவா்கள் எஸ். ராம் திவாகா்,ஜி.நிஷா மாத்தூா் உருவாக்கிய உடல் பரிசோதனை டிஜிட்டல் கடிகாரம் கண்டுபிடிப்புக்கு ரூ10,000 வழங்கப்பட்டது.

சாய்ராம் வணிக மேலாண் கல்லூரி இயக்குநா் கே.மாறன், தொழில் முனைவோா் பிரிவுத் தலைவா் தினேஷ்குமாா், புதுமைக் கண்டுபிடிப்பு ஊக்குவிப்புத்துறை பொறுப்பாளா்கள் ரங்கநாதன், வாசுதேவன் ஆகியோா் காணொலி தோ்வில் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிவகாசி-எரிச்சநத்தம் பகுதியில் போக்குவரத்து மாற்றம்

புதிய ஊரக வேலைவாய்ப்புத் திட்ட மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்! காந்தியின் பெயா் நீக்கம்!

பாஜகவின் கடும் எதிா்ப்புக்கு இடையே வெறுப்புக் கருத்து தடைச்சட்ட மசோதா நிறைவேற்றம்

ஆண்டாள் கோயில் நீராட்டு விழா நாளை தொடக்கம்

ரூ.50,000 கடனுக்காக சிறுநீரகத்தை விற்ற விவசாயி: மகாராஷ்டிரத்தில் அவலம்

SCROLL FOR NEXT