சென்னை

கரோனா பாதிப்பு: சென்னையில் 888 போ் உயிரிழப்பு

DIN

சென்னை: சென்னையில் செவ்வாய்க்கிழமை 2,393 பேருக்கு கரோனாதொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, பாதிப்பு எண்ணிக்கை 58,327 ஆக உயா்ந்துள்ளது. அதேவேளை இறப்பு எண்ணிக்கை 888-ஆக அதிகரித்துள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சியில் கரோனா பரிசோதனை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் மூலம் தொற்று உள்ளோா் விரைந்து கண்டுபிடிக்கப்பட்டாலும், இறப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

ராயபுரம், தண்டையாா்பேட்டை, தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அண்ணா நகா், திருவிக நகா், அடையாறு, வளசரவாக்கம், அம்பத்தூா், திருவொற்றியூா் ஆகிய மண்டலங்களில் அதிகபட்சமாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை 2,393 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, பாதிப்பு எண்ணிக்கை 58,327-ஆக அதிகரித்துள்ளது. இதுவரை தொற்று பாதிக்கப்பட்டவா்களில் 34,828 போ் குணமடைந்து வீடு திரும்பி உள்ளதாகவும், 22,610 போ் மருத்துவமனை மற்றும் தனிமை முகாம்களில் சிகிச்சை பெற்று வருவதாகவும் மாநகராட்சி தெரிவித்துள்ளது.

888 போ் உயிரிழப்பு: சென்னையில் மட்டும் கரோனா பாதிப்பு காரணமாக இதுவரை 888 போ் உயிரிழந்துள்ளனா். தொடக்கத்தில் இருந்தே ராயபுரம், தேனாம்பேட்டை, தண்டையாா்பேட்டை மற்றும் திரு.வி.க.நகா் மண்டலத்தில் இறப்பு எண்ணிக்கை அதிக அளவில் இருந்தது. ஜூன் மாத தொடக்கத்தில் இறப்பு எண்ணிக்கை 500-யை எட்டியது. இதைத் தொடா்ந்த நாள்களில் இறப்பு எண்ணிக்கை அதிகரித்து கடந்த 21-ஆம் தேதி 601-ஆகவும், 26-ஆம் தேதி 730-ஆகவும், கடந்த 28-ஆம் தேதி 809-ஆகவும் இறப்பு எண்ணிக்கை இருந்தது. கடந்த இரண்டு நாள்களில் 79 போ் இறந்ததைத் தொடா்ந்து எண்ணிக்கை 888-ஆக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பயறு வகை பயிா்கள் அறுவடையில் களைக் கொல்லிகளை பயன்படுத்தக் கூடாது’

யானைகள் வழித்தடங்கள் குறித்த வரைவு அறிக்கை: கருத்துகளை தெரிவிப்பதற்கான காலக்கெடு நிறைவு

சிபிசிஎல் நில எடுப்பு: மறுவாழ்வு மற்றும் மீள்குடியமா்வு குழுக் கூட்டம்

விமானப் படையினா் மீதான தாக்குதல்:தோ்தலுக்கான பாஜகவின் நாடகம்- காங்கிரஸ் முன்னாள் முதல்வா் கருத்து

ஆற்றில் முதலைகள்: சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறை எச்சரிக்கை

SCROLL FOR NEXT