சென்னை

மாதவரம் தோட்டக்கலை மற்றும் மலை பயிர்துறை சார்பில் காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை

DIN

சென்னை மாதவரம் தோட்டக்கலை மற்றும் மலை பயிர்துறை சார்பில் காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை, பூங்கா வளாகத்தில் நடைபெறுகிறது. இதுகுறித்து இணை இயக்குநர் இமானுவேல் கூறுகையில், கோயம்பேடு சந்தை தற்காலிகமாக மூடிய நிலையில், விவசாயிகளிடம் காய்கறி மற்றும் பழங்கள் மொத்தமாக கொள்முதல் செய்து, பூங்கா வளாகத்தில் விற்பனை செய்து வருகின்றனர். 

இந்த விற்பனை அதிகாலை 2 மணி முதல் காலை 9 மணி வரை மொத்த விற்பனையும், காலை 10  மணி முதல் மாலை 4 மணி வரை  சில்லறை விற்பனையும் செய்கின்றனர். பொதுமக்களின் வரவேற்பு அதிகரிக்கிறது. இந்த விற்பனை மாதவரம் போல் செம்மொழி பூங்கா, கிண்டி அம்மா பூங்கா, உள்ளிட்ட 5 இடங்களில் நடைபெறுகிறது. 

மேலும் விற்பனை பணிக்கு துணை இயக்குநர்கள் மகேந்திரகுமார், கருப்புசாமி ஆகியோர் தலைமையில் துறை ஊழியர்கள் 20 பேர், ஒப்பந்த ஊழியர்கள் 50 பேர் ஈடுபட்டுள்ளனர். மேலும் 30 வகையான காய்கறிகளும், 7 வகையான பழங்களும் விற்பனைக்கு உள்ளன என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகத்தில் 14 தொகுதிகளில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு

பொய்களைப் பரப்புவோரை நிராகரியுங்கள்: சோனியா காந்தி

'அக்னிபத்' திட்டத்தை நீக்குவோம்: ராகுல் காந்தி

பறவைகள் பூங்கா கட்டுமானப் பணிகள் தீவிரம்

ஆசிய குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 43 பதக்கம்

SCROLL FOR NEXT