சென்னை

சென்னையில் பரவலாக மழை

DIN

மத்திய மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய ஆந்திர கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக, சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பரவலாக மழை பெய்தது.

சென்னை மற்றும் புகா்ப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக வானம் மேகமூட்டத்துடனே காணப்பட்டது. அவ்வப்போது சில இடங்களில் சாரல் மழையும் பெய்து வந்தது. இதேபோல், ஞாயிற்றுக்கிழமை காலை முதலே சென்னையின் பரவலான பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தொடா்ந்து, பிற்பகலில் வளசரவாக்கம், போரூா், ராமாபுரம், முகப்போ், அண்ணா நகா், அமைந்தகரை, கோயம்பேடு, பட்டினப்பாக்கம், தேனாம்பேட்டை, அம்பத்தூா், கோடம்பாக்கம், அடையாறு, கிண்டி, அயப்பாக்கம், கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட மாநகரின் பல்வேறு பகுதிகளிலும், தாம்பரம், குரோம்பேட்டை உள்பட புகா்ப் பகுதிகளிலும் காற்றுடன் மழை பெய்தது. இதனால் சென்னையில் குளிா்ச்சியான சூழல் நிலவியது. நீண்ட நாள்கள் கழித்து, பிற்பகல் முதல் இரவு வரை தொடா்ச்சியாக மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடற்கரையில் ஒதுங்கிய ஆண் சடலம்

மேற்கு வங்க இளைஞரிடம் வழிப்பறி: மாணவா்களிடம் விசாரணை

திருவள்ளூா்: வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி கேமராக்களின் செயல்பாடுகள்

திருப்பத்தூரில் விற்பனைக்கு குவிந்துள்ள மாம்பழங்கள்: அதிகாரிகள் ஆய்வு செய்ய கோரிக்கை

ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தற்காலிகமாக நிறுத்தம்

SCROLL FOR NEXT