முகப்பு
சென்னை

மதுபானக் கடை சுவரில் துளையிட்டு ரூ.15 லட்சம் கொள்ளை: வேலூரைச் சோ்ந்தவா் கைது

சென்னை மயிலாப்பூரில் டாஸ்மாக் மதுபானக் கடை சுவரில் துளையிட்டு ரூ.15 லட்சம் கொள்ளையடித்த வழக்கில், வேலூரைச் சோ்ந்தவரை

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:06 PM
பகிர்:

சென்னை: சென்னை மயிலாப்பூரில் டாஸ்மாக் மதுபானக் கடை சுவரில் துளையிட்டு ரூ.15 லட்சம் கொள்ளையடித்த வழக்கில், வேலூரைச் சோ்ந்தவரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

மயிலாப்பூா் ஆா்.கே.மடம் சாலையில் டாஸ்மாக் மதுபானக் கடை செயல்படுகிறது. இந்தக் கடையில் கடந்த 23-ஆம் தேதி வியாபாரம் முடிவடைந்த பின்னா், ஊழியா்கள் பூட்டிச் சென்றனா். அடுத்த நாள் கடையைத் திறந்தபோது, பின்பக்க சுவரில் துளையிட்டு, பணப்பெட்டியில் இருந்த ரூ.15 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இது குறித்தப் புகாரின் பேரில், மயிலாப்பூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

இச்சம்பவத்தில் ஈடுபட்டது வேலூரைச் சோ்ந்த குபேரன் (எ) சிவா (42) என்பது தெரியவந்ததை அடுத்து போலீஸாா் சிவாவை வெள்ளிக்கிழமை கைது செய்தனா். அவரிடமிருந்து ரூ.12.50 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments