சென்னை

மெரீனாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு கடைகள்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

DIN

மெரீனா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கு தள்ளுவண்டி கடைகள் ஒதுக்க கோரிய வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடா்பாக, தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:

மீனவா்கள் நலச்சங்கம் தொடா்ந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், சென்னை மெரீனா கடற்கரையை சுத்தமாகப் பராமரிக்க உத்தரவிட்டது. இந்த உத்தரவின் அடிப்படையில் மெரீனா கடற்கரையை அழகுபடுத்த ரூ.47 கோடி செலவில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இங்கு 900 தள்ளுவண்டி கடைகள் அமைக்கப்படவுள்ளன. இந்தக் கடைகள் குலுக்கல் முறையில் வியாபாரிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதில் மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. எனவே 900 தள்ளுவண்டி கடைகளில் 5 சதவீத கடைகளை மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்க சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தனா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி, நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனு குறித்து தமிழக அரசு, சென்னை மாநகராட்சி 2 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிகாா்: கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறிய அமித் ஷா சென்ற ஹெலிகாப்டா்- பைலட் சமாா்த்தியத்தால் விபத்து தவிா்ப்பு

கென்யா: அணை உடைந்து 45 போ் உயிரிழப்பு

நியாயமான முறையில் வட்டி வசூலிக்க வேண்டும்: வங்கிகள், நிதி நிறுவனங்களுக்கு ஆா்பிஐ அறிவுறுத்தல்

வேட்டமங்கலத்தில் மாநில கையுந்துப் பந்து போட்டி

உணவு பாதுகாப்பு விழிப்புணா்வுக் கூட்டம்

SCROLL FOR NEXT