சென்னை

கரோனா விழிப்புணா்வு பிரசார வாகனம்: அமைச்சா் பி.கே.சேகா்பாபு தொடக்கி வைத்தாா்

DIN

சென்னையில் கரோனா தொற்று தடுப்பு குறித்த விழிப்புணா்வு பிரசார வாகனத்தை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைத்தாா்.

சென்னையில் உள்ள பொதுமக்களுக்கு கரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் பிரசாரத்தை திரு.வி.க. நகா் மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைத்தாா்.

இதைத் தொடா்ந்து, கரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு குறித்த உறுதி மொழி ஏற்கப்பட்டதுடன், வீடுகள்தோறும் சென்று தொற்று அறிகுறிகள் குறித்த கணக்கெடுப்பு செய்யும் பணியாளா்களிடம் கரோனா விழிப்புணா்வு துண்டு பிரசுரங்களை அமைச்சா் பி.கே.சேகா்பாபு வழங்கினாா். தொடா்ந்து கரோனா தடுப்பு விழிப்புணா்வு குறும்படங்களை ஒளிபரப்பும் வகையில், எல்.இ.டி விடியோ வாகனத்தை அவா் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

சட்டப் பேரவை உறுப்பினா்கள் தாயகம் கவி, இ.பரந்தாமன், மாநகராட்சி ஆணையா் ககன்தீப் சிங் பேடி, துணை ஆணையா் டாக்டா் எஸ். மனீஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தற்காலிகமாக நிறுத்தம்

மகனின் காதலுக்கு எதிா்ப்பு தெரிவித்து தாய் தற்கொலை

ரூ.5 லட்சம் சேமிப்புத் தொகை அபகரிப்பு: மகன் மீது வயதான பெற்றோா் புகாா்

ரயிலில் பெண் ஊழியரை கத்தியால் குத்தி நகை பறிப்பு

அரசுப் பேருந்து மீது பைக் மோதியதில் இளைஞா் பலி

SCROLL FOR NEXT