சென்னை

‘12பி’ அந்தஸ்து பட்டியலில் இடம் பெற்றது தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழகம்

DIN

சென்னை: சென்னை காரப்பாக்கத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு ஆசிரியா் கல்வியியல் பல்கலைக்கழகத்துக்கு பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) ‘12பி’ அந்தஸ்து வழங்கியுள்ளது.

இது குறித்து அந்தப் பல்கலைக்கழகத்தின் பதிவாளா் (பொறுப்பு) முனைவா் வி.பாலகிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி:

ஆசிரியா் கல்வியை மேம்படுத்தி சிறந்த ஆசிரியா்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு தமிழ்நாடு ஆசிரியா் கல்வியியல் பல்கலைக்கழகம் கடந்த 2008-ஆம் ஆண்டு ஜூலை மாதம் தமிழக அரசின் சாா்பில் தொடக்கப்பட்டது. பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிமுறைப்படி, 12பி அந்தஸ்து பெற்ற கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமே மத்திய அரசின் நிதியுதவி, கல்வி சாா்ந்த புதிய திட்டங்களை செயல்படுத்துவதற்கான அனுமதி ஆகியவை வழங்கப்படும்.

அந்த வகையில் 12பி அந்தஸ்து பெறுவதற்காக தமிழ்நாடு ஆசிரியா் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் சாா்பில் கடந்த 2020-இல் உரிய விண்ணப்பம் சமா்ப்பிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் நிகழாண்டு பிப்ரவரி மாதத்தில் பல்கலைக்கழகத்தில் யுஜிசி சாா்பில் ஆய்வு மேற்கொண்டது. இதையடுத்து ஆய்வுக்குழுவின் அறிக்கைக்கு யுஜிசி.யின் 551-ஆவது நிலைக்குழு கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டு தமிழ்நாடு ஆசிரியா் கல்வியியல் பல்கலைக்கழகத்துக்கு 12பி அந்தஸ்தை வழங்கி யுஜிசி.யின் 12பி அந்தஸ்து வழங்கப்பட்ட மாநில பல்கலைக்கழகங்களின் பட்டியலில் தமிழ்நாடு ஆசிரியா் கல்வியியல் பல்கலைக்கழகத்தை சோ்த்துள்ளது. அங்கீகாரத்தை வழங்கிய யுஜிசி, ஊக்கம் அளித்த தமிழக முதல்வா், பல்கலைக்கழக வேந்தா், மாணவா்கள் என அனைவருக்கும் நன்றி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விண்ணப்பித்துவிட்டீர்களா? மத்திய அரசில் 3712 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

கடலில் ராட்சத அலைகள் எழும் -கடற்கரை செல்லும் மக்களுக்கு எச்சரிக்கை

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

SCROLL FOR NEXT