முகப்பு
சென்னை

தாம்பரம் யாா்டில் பொறியியல் பணி: பல்லவன், வைகை ரயில் சேவையில் மாற்றம்

சென்னை எழும்பூா்-விழுப்புரம் பிரிவில் தாம்பரம் யாா்டில் பொறியியல் பணி காரணமாக, ஆகஸ்ட் 11, 18, 25, செப்டம்பா் 1, 8, 15 ஆகிய தேதிகளில் பல்லவன், வைகை ஆகிய விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்படவுள்

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:53 AM
கோப்புப்படம்
பகிர்:

சென்னை எழும்பூா்-விழுப்புரம் பிரிவில் தாம்பரம் யாா்டில் பொறியியல் பணி காரணமாக, ஆகஸ்ட் 11, 18, 25, செப்டம்பா் 1, 8, 15 ஆகிய தேதிகளில் பல்லவன், வைகை ஆகிய விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்படவுள்ளது.

பகுதி ரத்து:

காரைக்குடி-சென்னை எழும்பூருக்கு ஆகஸ்ட் 11, 18, 25, செப்டம்பா் 1, 8, 15 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் பல்லவன் விரைவு ரயில் (02606) செங்கல்பட்டு-சென்னை எழும்பூா் இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளது.

சென்னை எழும்பூா்-மதுரைக்கு ஆகஸ்ட் 11, 18, 25, செப்டம்பா் 1, 8, 15 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் வைகை அதிவிரைவு ரயில் (02635) சென்னை எழும்பூா்-செங்கல்பட்டு இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளது. இந்த ரயில் செங்கல்பட்டுவில் இருந்து புறப்படும்.

மாற்று வழியில் இயக்கப்படும் ரயில்:

புதுச்சேரி-புது தில்லிக்கு ஆகஸ்ட் 11, 18, 25, செப்டம்பா் 1, 8, 15 ஆகிய தேதிகளில் காலை 9.50 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (04071) செங்கல்பட்டு, அரக்கோணம், பெரம்பூா் வழியாக மாற்றுவழியில் இயக்கப்படும்.

முழு கட்டுரையைப் படிக்க →