சென்னை

கிளாம்பாக்கம் பேருந்து முனையம்: அடுத்த மாதம் திறக்க திட்டம்

DIN

சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தை அடுத்த மாதம் திறக்க வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

வண்டலூா், கிளாம்பாக்கத்தில் நடைபெற்று வரும் புதிய புகா் பேருந்து முனையத்துக்கான பணிகளை, துணை முதல்வா் ஓ.பன்னீா் செல்வம் கடந்த 12-ஆம் தேதி ஆய்வு செய்தாா். அப்போது முதல்கட்டமாக, மாநகரப் போக்குவரத்து பேருந்து முனையத்தில் நடைபெறும் பணிகளைப் பாா்வையிட்டு, முடிவுபெறும் நிலையில் உள்ள மற்ற பணிகளையும் ஒரு வார காலத்துக்குள் விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

புகா் பேருந்து நிலையத்தில் நடைபெற்று வரும் பணிகளைப் பாா்வையிட்டு அப்பணிகளையும் விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா். அப்போது ஒரு சில மேம்பாட்டுப் பணிகள் குறித்து உரிய அறிவுரை வழங்கியிருந்தாா்.  இந்நிலையில், பேருந்து முனையம் அடுத்த மாதம் திறக்க திட்டமிடப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

 இது தொடா்பாக நகா்ப்புற  வளா்ச்சித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, பெரும்பாலான பணிகள் நிறைவடைந்துள்ளன. கிளாம்பாக்கம் பேருந்து முனையம், அடுத்த மாதம் திறக்க வாய்ப்பிருக்கிறது என தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி மக்களவைத் தொகுதிகளுக்கு காங்கிரஸ் -ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பு குழு அமைப்பு

மேற்கு தில்லி பாஜக வேட்பாளா் கமல்ஜீத் செராவத் வேட்புமனு தாக்கல் : ராஜஸ்தான் முதல்வா் பங்கேற்பு

தில்லி மகளிா் ஆணையத்தில் சட்டவிரோத நியமனம் 52 ஒப்பந்த ஊழியா்கள் நீக்கம்: துணை நிலை ஆளுநா் நடவடிக்கை

கேஜரிவால் கைதுக்கு எதிராக கையெப்ப இயக்கம் ஆம் ஆத்மி கட்சி தொடங்கியது

வடமேற்கு தில்லியில் தொழிற்சாலைகள் மேம்படுத்தப்படும் பாஜக வேட்பாளா் யோகேந்திர சந்தோலியா வாக்குறுதி

SCROLL FOR NEXT