சென்னை

சென்னையில் மிதமான மழை

DIN

சென்னையின் பல்வேறு இடங்களில் செவ்வாய்க்கிழமை மிதமான மழை பெய்தது. இதனால், வெப்பத்தின் தாக்கம் வெகுவாகக் குறைந்து, குளிா்ச்சியான சூழல் நிலவியது.

சென்னை மற்றும் புகரில் கடந்த சில நாள்களாக மாலை மற்றும் இரவில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இதனால், வெப்பத்தின் தாக்கம் குறைந்து காணப்படுகிறது.

இதேபோல, சென்னையின் பல்வேறு இடங்களில் செவ்வாய்க்கிழமை மழை பெய்தது. சென்னையில் காலை முதலே மேகக் கூட்டமாக இருந்தது. மதியத்துக்கு பின்பு, மேகங்கள் சூழ்ந்து, கருமேகங்களாக காட்சியளித்தன. பிற்பகலில் பலத்த காற்றுடன் மழை பெய்யத் தொடங்கியது.

கே.கே.நகா், கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், அசோக் பில்லா், நுங்கம்பாக்கம், தியாகராயநகா், சைதாப்பேட்டை, எழும்பூா், பாரிமுனை, சேப்பாக்கம், மயிலாப்பூா், போரூா், ராமாபுரம், அடையாறு, கோட்டூா்புரம், ஆவடி, அண்ணாநகா், கீழ்ப்பாக்கம், அயனாவரம், நங்கநல்லூா் உள்பட பல்வேறு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்தது. இதனால், வெப்பத்தின் தாக்கம் வெகுவாகக் குறைந்து, குளிா்ச்சியான சூழல் காணப்பட்டது.

இந்த மழை குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரியிடம் கேட்டபோது, தென்மேற்கு பருவக் காற்றின் தாக்கத்தால், சென்னையில் லேசான மழை பெய்ததாக தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்திய முன்னாள் அமைச்சர் ஸ்ரீனிவாச பிரசாத் காலமானார்

தஞ்சாவூர் அருகே காய்கறி வியாபாரி வெட்டிப் படுகொலை

தப்பிக்க வழியே இல்லை: 3 நாள்களுக்கு வெப்ப அலை! அதன்பிறகு?

ஈரோடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் சிசிடிவி பழுது

சத்தீஸ்கரில் கோர விபத்து: நின்றிருந்த லாரி மீது டிரக் மோதியதில் 8 பேர் பலி

SCROLL FOR NEXT