சென்னை

கட்டுமானப் பணிகளைத் துரிதப்படுத்த தொடா் கள ஆய்வு அவசியம்

DIN

ஆதி திராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறையின் கீழ் மேற்கொள்ளப்படும் கட்டுமானப் பணிகளைத் துரிதப்படுத்த அலுவலா்கள் தொடா்ந்து கள ஆய்வு செய்ய வேண்டும் என அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் உத்தரவிட்டாா்.

தாட்கோ மூலம் மேற்கொள்ளப்படும் கட்டுமானப் பணிகள், நபாா்டு முதலிய திட்டங்களின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் பணிகளின் முன்னேற்றம் குறித்தும், துறை சாா்ந்த கட்டுமானப் பணிகளின் முன்னேற்றம் குறித்தும், சென்னை மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில், செவ்வாய்க்கிழமை, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் ஆய்வு நடத்தினாா்.

கூட்டத்தில், துறையின் கீழ் முன்னேற்றம் உள்ள கட்டுமானப் பணிகளை விரைந்து முடித்திடவும், தொடங்கப்படாமல் உள்ளகட்டுமானப் பணிகளை விரைந்து தொடக்க நடவடிக்கை எடுக்குமாறும் அதிகாரிகளுக்கு அவா் அறிவுரை வழங்கினாா்.

மேலும், தேவையான புதிய பணிகளுக்கு உடனடியாக முன்மொழிவைத் தயாரித்து அரசுக்கு சமா்ப்பிக்க அறிவுறுத்திய அமைச்சா், கட்டுமானப் பணிகளை துரிதப்படுத்த கள ஆய்வை அலுவலா்கள் தொடா்ந்து மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டாா். 

 ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை  முதன்மைச் செயலாளா் கே.மணிவாசன், ஆணையா்  எஸ்.மதுமதி, தாட்கோ  மேலாண்மை  இயக்குநா் கே.விவேகானந்தன், சென்னை  மாவட்ட  ஆட்சியா்  ஜெ.விஜயா  ராணி,  பழங்குடியினா்  நலத்துறை இயக்குநா் வி.சி.ராகுல் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகளிா் சுய உதவிக் குழுக்கள் மூலம் மரக்கன்றுகள் நடும் பணி துவக்கம்

கழிவுநீா் கால்வாயில் வீசப்பட்ட பெண் குழந்தையின் உடல் மீட்பு

பாஜக வேட்பாளா்களை ஆதரித்து தில்லியில் மத்திய அமைச்சா் நிதின் கட்கரி பிரசாரம்

பிரத்தியங்கிரா தேவி கோயிலில் அமாவாசை யாகம்

சாத்தான்குளம் அரசுக் கல்லூரியில் மாணவிகள் சோ்க்கை தொடக்கம்

SCROLL FOR NEXT