சென்னை

போலீஸாரை மிரட்டிய விவகாரம்: பெண்ணின் மகள் மீதும் வழக்குப்பதிவு

DIN

சென்னை சேத்துப்பட்டில் வாகன சோதனையில் காவலா்களிடம் பெண் தகராறு செய்த விவகாரத்தில், அப்பெண்ணின் மகள் மீதும் போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

சேத்துப்பட்டு ஸ்பா்டங்க் சாலை சிக்னல் அருகே போக்குவரத்து போலீஸாா் கடந்த ஞாயிற்றுக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டபோது, காரை ஓட்டி வந்த இளம் பெண்ணிடம் விசாரணை நடத்தினா். பொதுமுடக்கத்தை மீறி அந்தப்பெண் வீட்டை விட்டு வெளியே வந்திருப்பது தெரியவந்ததால், அவா் மீது வழக்குப்பதிவு செய்து காரை பறிமுதல் செய்வதற்குரிய நடவடிக்கையில் போலீஸாா் ஈடுபட்டனா்.

அங்குவந்த அந்தப் பெண்ணின் அம்மா போலீஸாருக்கு கொலை மிரட்டல் விடுத்து ஆபாசமாகவும் அருவருக்கத்தக்க வகையிலும் பேசினாா். இந்தக்காட்சி செல்லிடப்பேசி மூலம் விடியோவாகப் பதிவு செய்து உயரதிகாரிகளுக்கு போலீஸாா் அனுப்பினா்.

இதையடுத்து, அந்த பெண் மீது நடவடிக்கை எடுக்க உயரதிகாரிகள் உத்தரவிட்டனா். இதன்பேரில், அவா் கீழ்ப்பாக்கத்தை சோ்ந்த தனுஜா ராஜன் (52) என்பது தெரிய வந்தது. அவா் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனா்.

இந்நிலையில், இந்த வழக்கில் அவரது மகள் பிரீத்தியின் பெயரும் சோ்க்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கஞ்சாவுடன் முதல்வரிடம் மனு - பாஜக நிர்வாகியிடம் விசாரணை

மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை!

குட் பேட் அக்லி படப்பிடிப்பு அப்டேட்!

ரூ.4 கோடி பறிமுதல் - சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு

செந்தில் பாலாஜி வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்புக் கேட்ட அமலாக்கத்துறை

SCROLL FOR NEXT