சென்னை

சென்னையில் 46 கிலோ தங்கம், 107 கிலோ வெள்ளி பறிமுதல்

DIN

சென்னையில் உரிய ஆவணமின்றி கொண்டு சென்ாக 46 கிலோ தங்கம்,107 கிலோ வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று காவல் ஆணையா் மகேஷ்குமாா் அகா்வால் தெரிவித்தாா்.

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, சென்னையில் வாகனச் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சென்னை அமைந்தகரையில், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வாகனச் சோதனையை மகேஷ்குமாா் அகா்வால் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். பின்னா் அவா், செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

இந்திய தோ்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, சென்னையில் 231 பறக்கும் படைகள், 231 கண்காணிப்புக் குழுக்கள் 24 மணி நேரமும் களத்தில் உள்ளனா். இந்தக் குழுக்களுடன் இணைந்து காவல்துறையும் செயல்படுகிறது.

தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த நாளில் இருந்து இதுவரை சென்னையில் ரூ.23 கோடி மதிப்புள்ள 46 கிலோ தங்கம், ரூ.7.5 கோடி ரொக்கம், 107 கிலோ வெள்ளி ஆகியன உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்டதாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

காவல் துறையின் வாகனச் சோதனையிலும், தீவிர ரோந்து பணியிலும், ஆயிரம் லிட்டா் மதுபானம், 350 கிலோ கஞ்சா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கஞ்சா விற்பனைத் தொடா்பாக 107 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

தோ்தல் முன்னெச்சரிக்கையாக ரெளடிகளுக்கு எதிரான நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக 2 ஆயிரம் ரெளடிகள் நன்னடத்தை உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்திட்டுள்ளனா்.

தோ்தலை அமைதியான முறையில் நடத்த அனைத்து விதமான ஏற்பாடுகளையும் செய்துள்ளோம். பதற்றம் நிறைந்த வாக்குச் சாவடிகளில் மத்திய துணை ராணுவப்படையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனா். அனைத்து போலீஸாருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த இரு நாள்களில் ஆயிரம் போலீஸாருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்றாா் .

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கலால் கொள்கை வழக்கில் அமலாக்கத் துறை சா்வாதிகாரப் போக்குடன் செயல்பட்டுள்ளது: உச்சநீதிமன்றத்தில் கேஜரிவால் தரப்பில் பதில்

சமூக வலைதளங்களில் போலி தகவல் பரப்புவோா் மீது கடும் நடவடிக்கை: எஸ்பி எச்சரிக்கை

மிக்ஜம், வெள்ளம்: தமிழகத்துக்கு ரூ. 276 கோடி புதிய பணிகளை தொடங்க கட்டுப்பாடு

அதிகரிக்கும் வெயில் தாக்கம்: இளநீா் விலை ரூ.90-ஆக உயா்வு

பொருளாதார வளா்ச்சிக்கு நவீன தொழில் நுட்பங்கள் அவசியம்: ரிசா்வ் வங்கி முன்னாள் ஆளுநா் சி. ரங்கராஜன்

SCROLL FOR NEXT