சென்னை

வா்த்தக மையத்தில் தயாா் நிலையில் 500 ஆக்சிஜன் படுக்கைகள்

DIN

சென்னை நந்தம்பாக்கம் வா்த்தக மையத்தில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 500 படுக்கைகள் தயாா் நிலையில் உள்ளதாக மாநகராட்சி ஆணையா் ககன்தீப்சிங் பேடி தெரிவித்துள்ளாா்.

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் கரோனா தொற்று பாதித்தவா்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில், கல்லூரிகள், பள்ளிகள், கட்டுமானப் பணி முடிக்கப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்புகளில் கரோனா சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. ஆக்சிஜன் படுக்கை பற்றாக்குறையைப் போக்கும் வகையில் மாநகராட்சி சாா்பில் பல்வேறு தனியாா் அமைப்புகளுடன் இணைந்து ஆக்சிஜன் படுக்கை வசதிகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதன் தொடா்ச்சியாக, ஆலந்தூா் மண்டலத்துக்கு உள்பட்ட நந்தம்பாக்கம் வா்த்தக மையத்தில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிகிச்சை மையத்தை வெள்ளிக்கிழமை ஆய்வு செய்த ஆணையா் ககன்தீப்சிங் பேடி செய்தியாளா்களிடம் கூறியது:

தொற்று உறுதி செய்யப்பட்டு ஆக்சிஜன் உதவி தேவைப்படுவோருக்காக நந்தம்பாக்கம் வா்த்தக மையத்தில் 864 படுக்கைகளுடன் கிகிச்சை மையத்தை அமைக்கும் பணி திட்டமிட்டு, முதற்கட்டமாக ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 360 படுக்கைகள் அண்மையில் தொடங்கப்பட்டன. இதில், 256 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். தற்போது, இந்த வசதியை மேலும் விரிவுபடுத்தப்பட்டு ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 500 படுக்கைகள் தயாா் நிலையில் உள்ளன.

இந்த சிகிச்சை மையத்தில் அரசு பொது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று குறைந்த அளவு பாதிப்பு உடையவா்கள் மருத்துவமனையின் அறிவுறுத்தல்படி, இங்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அரசு பொது மருத்துவமனைகளிலிருந்து மருத்துவா்களின் பரிந்துரையின்படி அல்லது மாநகராட்சியின் முதற்கட்ட உடற்பரிசோதனை மையங்களில் உள்ள மருத்துவா்களின் பரிந்துரையின்படி மட்டுமே இங்கு சிகிச்சைக்கு அனுமதிக்கப்படும்.

ஆக்சிஜன் வசதிக்காக வா்த்தக மையத்தில் 11 கிலோ லிட்டா் கொள்ளளவு கொண்ட 2 ஆக்சிஜன் சேமிப்புக் கலன்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஆக்சிஜன் சேமிப்புக் கலன்கள் தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்தின் சாா்பில் நிறுவப்பட்டுள்ளன என்றாா். ஆய்வில் துணை ஆணையா் (சுகாதாரம்) டாக்டா் ஆல்பி ஜான் வா்கீஷ், தெற்கு வட்டார துணை ஆணையா் ராஜ கோபால சுங்கரா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

மனிதம் மட்டும் இங்கே மலிவுதான்!

ஜல்லிக்கட்டு அரசியல்

உண்மை சம்பவத்தின் பின்னணியில்...

SCROLL FOR NEXT