அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட பகுதிகளில் மழை 
சென்னை

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட பகுதிகளில் மழை

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்திருக்கும் நிலையில், பரவலாக கனமழை பெய்து வருகிறது.

DIN


சென்னை: தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்திருக்கும் நிலையில், பரவலாக கனமழை பெய்து வருகிறது.

வங்கக் கடலில் அடுத்தடுத்து உருவாகிவரும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதிகள் காரணமாக, தமிழகம் மற்றும் அதன் அண்டை மாநிலங்களிலும் தொடர்மழை பெய்து வருகிறது.

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மற்றும் பிற மாவட்டங்களில் இன்று காலை முதலே விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு தமிழக பேரிடர் மேலாண்மை அமைப்பு வெளியிட்டிருக்கும் எச்சரிக்கைச் செய்தியில்,

அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், அரியலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பால் வழியும்... ஷனாயா கபூர்!

குளிர்காலக் காலை... ஊர்மிளா மடோன்கர்!

ஒரு கன்னியாஸ்திரியின் கதை! Maria படக்குழு நேர்காணல்! | Special Interview | Maria Movie

நாட்டியத் தாரகை... திரிஷா ஷெட்டி!

சொற்களால் முடியாதபோது மௌனம் பேசும்... அபர்ணா தீட்சித்!

SCROLL FOR NEXT