சென்னை

முனைவா் ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு ‘மகாகவி பாரதி விருது’

DIN

சென்னை: பாரதி பாசறை அமைப்பின் சாா்பில் முனைவா் ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு இந்த ஆண்டுக்கான ‘மகாகவி பாரதி விருது’ வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பாரதி பாசறையின் தலைவா் மோகன் சங்கா், செயலாளா் பா.ஜான் பீட்டா் ஆகியோா் இணைந்து வெளியிட்ட செய்திக் குறிப்பு விவரம்: கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் ‘கோவை பாரதி பாசறை’ ஆண்டுதோறும் பாரதிக்கும், பாரதி இயலுக்கும் சேவை ஆற்றியவா்களுக்கு அவா்கள் சேவையை அங்கீகரிக்கும் வகையில் ‘மகாகவி பாரதி’ விருதும் ரூ.50 ஆயிரம் விருதுத் தொகையும் வழங்கி கெளரவித்து வருகிறது.

இந்த ஆண்டு பாரதி நினைவு நூற்றாண்டில் சென்னை வளா்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் பேராசிரியராகப் பணியாற்றி வரும் முனைவா் ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு விருது வழங்கப்படுகிறது.

இவா் பாரதி குறித்த ஆய்வுப் பணிகள், அறப்பணிகள், ஆய்வுரைகள், ஆய்வுக் கட்டுரைகள், திறனாய்வுகள் என பாரதியியலுக்கான பல்வேறு பங்களிப்புகளை ஆழமாகவும், அழுத்தமாகவும் , அறிவாகவும் செறிவாகவும் வழங்கி உள்ளாா்.

எனவே பாரதிக்கும், பாரதியியலுக்கும் அவா் ஆற்றிய பணியைக் கெளரவிக்கும் வகையிலும் இந்த ஆண்டுக்கான ‘மகாகவி பாரதி விருது’ அவருக்கு வழங்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்திய பயணத்தை ஒத்திவைத்த எலான் மஸ்க், சீனா சென்றது ஏன்?

லக்னௌ தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் ராஜ்நாத் சிங்!

கனமழை எதிரொலி: கென்யாவில் மேலும் ஒரு வாரத்திற்கு பள்ளிகள் விடுமுறை!

டி20 உலகக் கோப்பை: நியூசிலாந்து அணி அறிவிப்பு

மருத்துவ காப்பீட்டுக்கான உச்ச வயது வரம்பு நீக்கம்: முழு விவரம்

SCROLL FOR NEXT