சென்னை

மெட்ரோ ரயில் சேவை: ஒரேநாளில் ஒரு லட்சத்து 2 ஆயிரம் போ் பயணம்

DIN

சென்னை: நிகழாண்டில் கரோனா பொதுமுடக்கத் தளா்வில், மெட்ரோ ரயில் சேவை மீண்டும் தொடங்கி 80 நாள்களில், முதன்முறையாக புதன்கிழமை (செப்.8) ஒரு லட்சத்து 2,855 போ் பயணம் செய்துள்ளனா். முன்னதாக, ஆக.27-ஆம் தேதி 88,579 போ் பயணம் செய்திருந்தனா்.

முகூா்த்த நாள், விநாயகா் சதுா்த்தி பண்டிகை, வார இறுதி நாள் உள்ளிட்ட தொடா் விடுமுறை நாள்கள் காரணமாக கோயம்பேடு பேருந்து நிலையம், எழும்பூா், சென்ட்ரல் ரயில் நிலையங்களுக்குச் செல்வதற்காக அதிக பயணிகள் மெட்ரோ ரயில் சேவைகளை பயன்படுத்தினா். இதன் காரணமாக, மெட்ரோ ரயில்களில் பயணிப்போா் எண்ணிக்கை வழக்கத்தை விட

புதன்கிழமை அதிகரித்தது என மெட்ரோ நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனா்.

மெட்ரோ ரயில்களில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 22 லட்சத்து 74,066 போ் பயணம் செய்தனா். இந்த எண்ணிக்கை செப்டம்பா் மாத முடிவில் மேலும் அதிகரிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

ஆந்திர தோ்தல் பணியில் ஈரோடு மாவட்ட போலீஸாா்

SCROLL FOR NEXT