முகப்பு
சென்னை

சென்னையில் இரு சிறுவர்கள் ரத்தவாந்தி: குளிர்பான நிறுவனத்தில் சோதனை

 சென்னை புது வண்ணாரப்பேட்டையில் குளிர்பானம் அருந்திய 2 சிறுவர்கள் ரத்த வாந்தி எடுத்த புகாரின்பேரில் செங்குன்றம் அடுத்த அலமாதியில் உள்ள குளிர்பான கிடங்கில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:12 AM
சோதனையில் ஈடுபட்டுள்ள உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள்
பகிர்:

சென்னை புது வண்ணாரப்பேட்டையில் குளிர்பானம் அருந்திய 2 சிறுவர்கள் ரத்த வாந்தி எடுத்த புகாரின்பேரில் செங்குன்றம் அடுத்த அலமாதியில் உள்ள குளிர்பான கிடங்கில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மாதிரிகளை சேகரித்து வருகின்றனர்.

சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் குளிர்பானம் குடித்ததால் 2 சிறுவர்கள் மயக்கம் அடைந்து மருத்துவ மனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனையடுத்து குளிர்பானம் தொடர்பாக அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். அந்த குளிர்பானம் வைத்துள்ள செங்குன்றம் அடுத்த அலமாதியில் உள்ள கிடங்கில் திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு செய்து மாதிரிகளை சேகரித்து வருகன்றனர்.

கிருஷ்ணகிரியில் உள்ள குளிர்பான ஆலையில் இருந்து இங்கு வரவழைக்கப்பட்டு  விநியோகம் செய்யப்பட்டு வருவதால் மாதிரிகளை சேகரித்து வருவதாகவும், விற்பனைக்கு அனுப்பப்பட்ட குளிர்பானங்கள் திரும்ப பெறப்படும் எனவும், இங்கிருந்து தற்காலிகமாக விநியோகம் நிறுத்த உத்தரவிட்டுள்ளதாகவும் திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள்  தெரிவித்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →